

பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர் உள்ளிட்ட பதவிகளில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி யின வகுப்பினர், சிறுபான்மை யினர், பெண்களுக்கு உரிய பிரதி நிதித்துவம் வழங்க வேண்டும் என கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள பல்கலைக் கழகங்களில் 9 துணைவேந்தர், 8 பதிவாளர், 10 தேர்வு கட்டுப் பாட்டாளர் பதவிகள் காலியாக உள்ளன. இந்தப் பதவிகளையும், சிண்டிகேட் மற்றும் செனட் உறுப் பினர் பதவிகளையும் நிரப்பும் போது தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பினர், சிறுபான்மையினர், பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும். இதுதொடர்பாக கடந்த மார்ச் மாதம் தமிழக உயர்கல்வித் துறை செயலருக்கும் பல்கலைக் கழக மானியக் குழுவுக்கும் மனு அனுப்பினேன். அதற்கு, எந்த பதிலும் இல்லை. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பினர் உள்ளிட்டோருக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் திருமாவளவன் கோரியுள்ளார். இம்மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.