Published : 16 Aug 2016 08:59 AM
Last Updated : 16 Aug 2016 08:59 AM

சிந்தனைகளை திசை திருப்பும் தொலைக்காட்சி தொடர்களை புறக்கணியுங்கள்: தமுஎகச கலை விழாவில் வலியுறுத்தல்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கள் கலைஞர்கள் சங்கம் (தமுஎகச) சார்பில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு, மதுரை நாகமலை புதுக்கோட்டையில் நேற்று முன்தினம் இரவு கலை இரவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோமாதா புத்திரர்கள் என்ற தலைப்பில் தமுஎகச லெட்சுமணப் பெருமாள் பேசியதாவது:

பெண்கள் பெறும் அறிவு சமூக மேன்மைக்கு வித்திடுவதாக அமைய வேண்டும். மாறாக அவர் களின் சிந்தனைகளை திசை திருப்பும் தொலைக்காட்சி தொடர் களை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தின ராகக் கலந்துகொண்ட அவனிமாட சாமி பேசியதாவது: கிராமப்புற குழந்தைகளுக்கு சரியான வாய்ப்பு களை உருவாக்கித் தர வேண்டும். கல்வி என்பது புரட்சியை முன் னெடுப்பதாக இருக்க வேண்டுமே தவிர வறட்சியை ஊக்குவிப்பதாக இருக்கக் கூடாது. வானொலி செய்திகள் இனி மாநில மொழி களில் வாசிக்கப்படாது என்ற தகவல்கள் நாட்டின் ஒற்றுமைக்கு ஆபத்தாக அமையுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது என்றார்.

இதில் பகத்சிங் கலைக்குழு பள்ளி மாணவர்களின் பின்நவீனத் துவ நாடகம், லிம்போ கேசவனின் சாகச நடனம், சக்கரத்தாழ்வார் கலைக் குழுவினரின் கரகாட்டம், கருமாத்தூர் கலைக் குழுவின் கோடாங்கி ஆட்டம் நடைபெற்றது.

தமுஎகச கிளைத் தலைவர் பர்வத வர்த்தினி தலைமை வகிக்க தமுஎகச மாநில து.செயலர் வேலாயுதம், மாவட்ட து.தலைவர் ராமகிருஷ் ணன், கிளைச் செயலர்லெனின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x