

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சென்னையில் நிருபர்களிடம் நேற்று கூறிய தாவது:
அரசு விடுமுறை தினங்களைப் பொறுத்த வரை நாடு முழுவதும் கொண்டாடுவது, சில மாநிலங்களில் மட்டுமே கொண்டாடப் படுவது, மாநிலத்தில் மட்டுமே கொண் டாடப்படுவது மற்றும் மாவட்டங்களுக் குள் கொண்டாடப்படுவது என 4 வகையாக பிரிக்கப்பட்டுள்ளன.
கட்டாய விடுமுறை 14 நாட்களும், மாநில விடுமுறையில் 3 நாட்களும் மத்திய அரசு ஊழியர்கள் எடுத்துக் கொள்ளலாம். இந்த விடுமுறை நாட்கள் எவை என்பதை ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கும் மத்திய அரசு ஊழியர்கள் நல ஒருங்கிணைப்பு கமிட்டி முடிவு செய்யும். இதில் மத்திய அரசுக்கு எந்த சம்பந்தமும் இல்லை.
உண்மை நிலை இப்படி இருக்கும்போது, பொங்கல் தின விடுமுறையை மத்திய அரசு ரத்து செய்துவிட்டது. தமிழர்களுக்கு துரோகம் செய்துவிட்டது என்றெல் லாம் திசை திருப்பி மக்களைத் தூண்டி விடும் சதிச் செயலில் ஈடுபடுவது வருத்தமளிக்கிறது.
2008-ம் ஆண்டிலேயே இந்த கட்டாய விடுமுறை நாட்கள், சிறப்பு விடுமுறை நாட்கள் பட்டியல் அரசாணையாக வெளியிடப்பட்டது. அப்போது ஆட்சியில் இருந்த திமுகவும், காங்கிரஸும் ஏன் எதிர்க்கவில்லை. ஜல்லிக் கட்டு போட்டியை தடையின்றி நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.