லெஹர் இன்றிரவு அந்தமானில் கரையைக் கடக்கிறது

லெஹர் இன்றிரவு அந்தமானில் கரையைக் கடக்கிறது
Updated on
1 min read

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக புயலாக மாறி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்தப் புயலுக்கு 'லெஹர்' என பெயரிடப்பட்டுள்ளது.

'லெஹர்' புயல் இன்றிரவு அந்தமான் நிகோபார் தீவுகளில் போர்ட்பிளேர் அருகே கரையை கடக்கும் என வனிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

புயல் கரையைக் கடக்கும் போது மணிக்கு 190 கி.மீ. வேகத்தில்பலத்த காற்றுடன், மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆந்திராவில் 'லெஹர்' புயல் காரணமாக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே வங்கக்கடலில் உருவான பைலின், ஹெலன் புயல்களால் கடும் பாதிப்புக்குள்ளான ஆந்திராவின் கடலோரப் பகுதிக்கு தற்போது 'லெஹர்' புயலும் சவாலாகவே இருக்கும் என கூறப்படுகிறது.கடல் சீற்றம் அதிகமிருக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புயல் எச்சரிக்கைக் கூண்டு:

புயல் உருவாகியுள்ளதை ஒட்டி, சென்னை, கடலூர், புதுவை, நாகை, பாம்பன், தூத்துக்குடி, எண்ணூர், காரைக்கல் துறைமுகங்களில் 2- ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புயல் உருவாகியுள்ளதை அறிவிக்கும் வகையில் 2- ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in