

தமிழக அரசியல் நிலவரத்துக்குத் தீர்வு காண்பதில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க முடியாது என்று பாஜக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
சென்னை வடபழனியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழக நிலவரம் குறித்த முடிவு எடுப்பதில் ஆளுநர் அவசரம் காட்டக்கூடாது, தமிழகத்தில் பெரும்பான்மையானவர்கள் கருத்தும் இதுவாகவே உள்ளது.
தமிழக ஆளும் கட்சியிலும் அந்தக் கருத்து காணப்படுகிறது. யார் பதவியேற்க வேண்டும் என்பதை பாஜக முடிவு செய்ய முடியாது. அது அந்தக் கட்சியினர் எடுக்க வேண்டிய முடிவு. சட்ட ரீதியான விவகாரங்களை ஆராய்ந்தே அவர் முடிவெடுக்க முடியும், அவர் இன்றே முடிவெடுத்தாலும் நலம்தான்” என்றார்.