ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் இயற்ற வேண்டும்: தமிழக அரசுக்கு விஜயகாந்த் வலியுறுத்தல்

ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் இயற்ற வேண்டும்: தமிழக அரசுக்கு விஜயகாந்த் வலியுறுத்தல்
Updated on
1 min read

ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அவசர சட்டம் இயற்ற வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தினார்.

ஜல்லிக்கட்டு நடத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தேமுதிக சார்பில் மதுரை மாவட் டம், அலங்காநல்லூரில் வாடிவாசல் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தலைமை வகித்து விஜயகாந்த் பேசியதாவது:

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கக் காரணமான பீட்டா அமைப்பை கலைக்க வேண்டும். பீட்டா அமைப்பில் உள்ளவர் களுக்கு தமிழர்களின் பாரம்பரி யம், பண்பாடு குறித்து தெரி யாது. மாடுகளை கொடுமைப் படுத்துவதாக அவர்கள் கூறுகின்ற னர். ஆனால் நாம் குழந்தைகளைப் போல பாதுகாப்பாக வளர்த்து வருகிறோம்.

வாடிவாசல் என்றால் என்ன என்பது கூட பீட்டாவுக்கு தெரி யாது. ஆனால் அவர்கள் ஜல்லிக் கட்டை நடத்தக் கூடாது எனக் கூறுகின்றனர். எங்கள் வீட்டில்கூட 3 மாடுகளை வளர்த்து வருகிறோம். அவற்றை பராமரித்து வளர்ப்பது எவ்வளவு கடினமானது என பீட்டா அமைப்பினருக்கு தெரியுமா?.

கேரளாவில் யானை பந்தயம் நடத்தப்படுகிறது. அதேபோல வட மாநிலங்களில் ஒட்டகப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. அந்த போட்டிகளை பீட்டா அமைப்பினரால் தடை செய்ய முடிய வில்லை. ஆனால் தமிழகத்தில் நடத்தப்படும் ஜல்லிகட்டுக்கு மட்டும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

சட்டப்பேரவையிலும், மக்க ளவையிலும் அதிக உறுப்பினர் களைக் கொண்ட அதிமுகவுக்கு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான கூடுதல் பொறுப்பு உண்டு. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அவசர சட்டம் இயற்ற வேண்டும். மத்திய அரசைக் கண்டு மாநில அரசு பயப்படக் கூடாது. ஜல்லிக்கட்டு விவகாரத்தில் திமுக பொய்யாக கண்ணீர் வடித்து வருகிறது என்றார்.

இதில் மாவட்டச் செயலாளர்கள் சிவமுத்துக்குமரன், பாலச்சந்திரன், பொருளாளர் இளங்கோவன், முன் னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.கே.டி.ராஜா உட்பட ஆயிரக்கணக் கானோர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in