

அதிமுக (அம்மா) அணியைச் சேர்ந்த அதிமுக எம்.பி.க்கள் அருள் மொழித்தேவன், அரி ஆகிய இரு வரும் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
அதிமுக தலைமைக் கழகத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக் களுடன் தலைமைக் கழக செயலாள ரும், முதல்வருமான கே.பழனிசாமி கடந்த 21-ம் தேதி ஆலோசனை நடத்தினார். அப்போது, குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட் பாளருக்கு ஆதரவு தருமாறு பிரத மர் நரேந்திர மோடி தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வேண்டுகோள் விடுத்த தாகவும், அதுகுறித்து ஆலோசிக் கவே எங்களை அழைத்ததாகவும் கூறினார். அக்கூட்டத்தில் மக்க ளவை துணைத் தலைவர் தம்பி துரையும் கலந்துகொண்டார்.
இந்தக் கூட்டத்துக்குப் பிறகு, குடி யரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு அதிமுக ஆதரவு அளிக்கும் என்று செய்தியாளர்களிடம் முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். கட்சியின் ஒட்டுமொத்த பிரதிபலிப்பாகவே இந்த அறிவிப்பை முதல்வர் வெளியிட்டார். முதல்வர் பேட்டி அளித்தபோது தம்பிதுரையும் உடன் இருந்தார்.
மறுநாள் (22-ம் தேதி) டெல்லி சென்ற தம்பிதுரை அங்கே வேறுவிதமாகப் பேசியுள்ளார். பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவை சந்தித்துவிட்டு வந்து, அவரது அனுமதியுடன்தான் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித் தோம் என்று கூறியிருக்கிறார். அவர் இப்படி மாறி மாறிப் பேசுவது கட்சி யில் குழப்பத்தை ஏற்படுத்தியுள் ளது. இது தேவையில்லாத கருத்து, அவரது சொந்தக் கருத்து. இதை அதிமுகவின் கருத்தாக கருத முடி யாது. அவரது இந்தக் கருத்து தொண்டர்கள் மத்தியில் அதிருப்தி, மன வருத்தத்தை ஏற்படுத்தி யுள்ளது.
தமிழகத்தில் ஆட்சியையும், கட்சி யையும் முதல்வர் பழனிசாமிதான் வழிநடத்தி வருகிறார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆசி யால் அதிமுக கட்சி நன்றாக இருக்க வேண்டும். கட்சி ஒன்றுபட வேண்டும். அவர் உயிரைக் கொடுத்து அமைத்த இந்த ஆட்சி சிறப்பாக நடைபெற வேண்டும். மக்களுக்கு அவர் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும். ஆட்சியும், கட்சியும் தொடர்ந்து மக்களுக்காகப் பணி யாற்ற வேண்டும். கட்சி ஒன்றுபட்டு, சிறப்பான மக்களாட்சி நடைபெற வேண்டும். அதற்காகவே முதல்வர் பழனிசாமி தலைமையில் ஒருமித்த கருத்தோடு நாங்கள் அனைவரும் செயல்படுகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.