மறுசுழற்சி முறையில் தண்ணீர் பயன்பாடு: பொதுமக்களிடம் விழிப்புணர்வு அவசியம்

மறுசுழற்சி முறையில் தண்ணீர் பயன்பாடு: பொதுமக்களிடம் விழிப்புணர்வு அவசியம்
Updated on
2 min read

மறுசுழற்சி முறையில் தண்ணீரை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது குறித்து பொதுமக்களிடம் விழிப் புணர்வு ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் சென்னை போன்ற பெருநகரங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுக்க முடியும் என்று அண்ணா பல்கலைக்கழக நீர்வள மைய கவுரவப் பேராசிரியர் ஆர்.சக்திவடிவேல் தெரிவித்தார்.

இந்திய நீர்வள அமைச்ச கத்தின் மத்திய நிலத்தடி வாரிய தென்கிழக்கு கடற்கரை மண் டலம் சார்பில் ‘நீர் சேமிப்பு மற்றும் பாதுகாப்பு’ குறித்து ஒரு நாள் பயிலரங்கம், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை நடந்தது. அண்ணா பல்கலைக்கழக நீர்வள மையத்தின் முன்னாள் இயக்குநரும், கவுரப் பேராசிரியருமான ஆர்.சக்தி

வடிவேல், பயிலரங்கைத் தொடங்கி வைத்துப் பேசியதாவது:

நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதனால் தண்ணீருக்கான தேவையும் அதிகரிக் கிறது. ஆனால், தண்ணீர் விநி யோகம் குறைந்துகொண்டே போவதால் மழைநீரைச் சேமிக்க வும் நிலத்தடி நீர்மட்டத்தை மேம் படுத்தவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

தண்ணீரின் அளவைவிட, அதன் தரத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. தண்ணீரை மறுசுழற்சி முறையில் மீண்டும் மீண்டும் பயன்படுத்தினால் தட்டுப்பாடு ஒருபோதும் வராது. இதுபற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற் படுத்த வேண்டும்.

அனைத்து பயன்பாட்டுக்கும் நல்ல தண்ணீரையே பயன்படுத்த வேண்டும் என்ற மக்களின் மனநிலை மாற வேண்டும். வீட்டில் சமைப்பது, குளிப்பது, துணி துவைப்பது, பாத்திரம் கழுவுவது போன்ற பயன்பாட்டின்போது வெளியேறும் கழிவுநீரைச் சுத்தி கரிப்பது எளிது. கழிவறையில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்திகரிக்க தனி தொழில்நுட்பம் உள்ளது.

மொத்தத்தில் ஒரு சொட்டு கழிவுநீரைக்கூட விரைய மாக்காமல் மறுசுழற்சி முறையில் மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் தொழில்நுட்பம் இப்போது இருக்கிறது. இவற்றை அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பயன்படுத்த முன்வர வேண்டும். அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவோர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துடன் கட்ட வேண்டும் என்றும், அங்கே சுத்திகரிப்பு செய்த பிறகு கிடைக்கும் தண்ணீர் போக, மீதமுள்ள தண்ணீர்தான் சப்ளை செய்யப்படும் என்றும் ஒழுங்கு முறைகளை அரசு கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும். அவரவர் தகுதிக்கு ஏற்ப தண்ணீரைச் சுத்திகரித்துப் பயன் படுத்தினால் சென்னை போன்ற பெருநகரங்களில் தண்ணீர் பஞ்சம் ஒருபோதும் ஏற்படாது.

தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது குறித்து பள்ளிக் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தனியார் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மறுசுழற்சி முறையில் தண்ணீர் பயன்படுத்துவதை உறுதிசெய்ய வேண்டும். அவ்வாறு தண்ணீரைச் சுத்தம் செய்யும்போது ரசாயனம், எரிசக்தி, உரம் போன்றவற்றையும் பெற முடியும். இவ்வாறு சக்தி வடிவேல் கூறினார்.

இப்பயிலரங்கில், மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் மண்டல இயக்குநர் சம்பத் குமார் வரவேற்றார். அண்ணா பல்கலைக்கழக தொலையுணர்வு நிறுவன இயக்குநர் எம்.ராம லிங்கம், தமிழகப் பொதுப்பணித் துறை சிறப்புச் செயலாளர் கே.வி.ராஜன் ஆகியோர் பேசினர். நிறைவில் மூத்த விஞ்ஞானி ஏ.சுப்புராஜ் நன்றி கூறினார். மத்திய, மாநில அரசு அதிகாரிகள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள், தொழிலதிபர்கள், தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in