

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் மூலிகைக் கல்வி சான்றிதழ் படிப்பு புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மதுரை காமராசர் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''மதுரை காமராசர் பல்கலைக்கழக, வயது வந்தோர் தொடர்கல்வி மற்றும் விரிவாக்கப் பணித்துறையில் மூலிகைக் கல்வி சான்றிதழ் படிப்பு புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்தப் படிப்புக்கு பத்தாம் வகுப்பு மற்றும் அதற்குமேல் படித்த மாணவ மாணவிகள் விண்ணப்பிக்கலாம். இந்தப் படிப்பு 6 மாத காலம் நடைபெறும். மூலிகைக் கல்வி படிப்பு செய்முறை பயிற்சி வாயிலாகவும் நடத்தப்படும். இப்படிப்பை வெற்றிகரமாக முடிக்கும் மாணவ மாணவிகளுக்கு பல்கலைக்கழகச் சான்றிதழ் வழங்கப்படும்.
மேலும் இது பற்றிய விரிவான தகவலுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 0452-2537838.ஒருங்கிணைப்பாளர், வயதுவந்தோர் தொடர்கல்வி மற்றும் விரிவாக்கப்பணித்துறை, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், பாண்டியன் ஓட்டல் எதிர்புறம், அழகர்கோவில் சாலை, மதுரை – 625 002 என்ற முகவரியில் படிப்பு நடைபெறும் இடம் மற்றும் பயிற்சிக்கான விண்ணப்பம் பெற நேரில் அணுகலாம்'' என்று தெரிவித்துள்ளது.