

சென்னை மாநகராட்சி சார்பில் அம்மா வாரச் சந்தை தொடங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் 25 அரசுத் துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் 45 வங்கிகளைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
அம்மா வாரச் சந்தைக்கு முழு வடிவம் கொடுக்கும் விதமாக அரசுத் துறை அதிகாரிகள் மற்றும் வங்கி அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது. அதில் மேயர் சைதை துரைசாமி, ஆணையர் டி.கார்த்திகேயன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
இதில் அம்மா வாரச் சந்தையின் நோக்கம், அவை செயல்படும் விதம், அரசுத் துறைகள் மற்றும் வங்கிகளிடம் மாநகராட்சியின் எதிர்பார்ப்புகள் என்ன என்பது குறித்து, திட்டத்துக்கு மாநில ஒருங்கிணைப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள பி.ஜெயபால் விளக்கினார். 25 அரசுத் துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் 45 வங்கிகளைச் சேர்ந்த அதிகாரிகள் ஆலோசனை வழங்கினர்.