

தமிழக பாஜக செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் இன்னும் ஒரு வாரத்துக்குள் கூட்டப்படும். நிர்வாகிகளும் விரைவில் நியமனம் செய்யப்படுவார்கள் என்று மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
பாஜக மாநிலத் தலைவராக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, மாநிலத் தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டார். கட்சியில் மாநில, மாவட்ட அளவிலான சில பதவிகள் காலியாக இருந்ததால், புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டது. முதலில், பாஜக மாநில பொதுக்குழு, செயற்குழுக் கூட்டத்தை கூட்டி அதில் தமிழிசை சவுந்தரராஜனை ஒருமனதாக தலைவராக தேர்வு செய்த பின்னர் புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியாகும் என்று பாஜக வட்டாரத்தில் கூறப்பட்டது.
ஆனால் தமிழிசை சவுந்தர ராஜன் தலைவராக அறிவிக்கப் பட்டு ஒரு மாதத்துக்கு மேலாகியும் பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம் நடத்தப்படவில்லை. இதனால், நிர்வாகிகள் நியமனமும் தாமதமாகியுள்ளது. இதற்கிடையில், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா கடந்த மாதம் கேரளா வந்தார். தமிழகத்துக்கும் அவர் வருவார் என்று ஏற்கெனவே கூறப்பட்டிருந்தது. ஆனால், அவர் தமிழகம் வராமல் டெல்லி திரும் பினார். இதுவும் தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத் தியது.
இதுதொடர்பாக பாஜக நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
தமிழகத்தில் பாஜக தற்போது நன்கு வளர்ச்சி அடைந்து வருகிறது. கடந்த மக்களவைத் தேர்தலில் எங்கள் கூட்டணி 18% வாக்குகள் பெற்றது. இது திமுகவைவிட அதிகம். பாஜகவை அமைப்பு ரீதியாக பலப்படுத்த தமிழகத்தில் சாதக மான சூழல் நிலவுகிறது. இதை சரியாகப் பயன்படுத்தினால் சட்டப்பேரவைத் தேர்தலில் சாதிக்க முடியும். இந்த கருத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
இதன் அடிப்படையில் தமிழகத் துக்கு கூடுதலாக சில பொறுப்பு களும் உருவாக்கப்பட்டன. ஏற்கெனவே மாநில பொதுச் செயலாளர்களாக மோகன் ராஜுலு (அமைப்பு), வானதி சீனிவாசன், கருப்பு முருகானந்தம், சரவணப் பெருமாள் ஆகியோர் உள்ளனர். கூடுதலாக ஒரு மாநில பொதுச் செயலாளர் பதவி உருவாக்கப் பட்டுள்ளது. ஆனால் இந்த பொறுப்பு உட்பட மாவட்டம், ஒன்றியம் என பல இடங் களில் நிர்வாகிகள் நியமிக்கப் படவில்லை. சட்டப் பேரவைத் தேர்தல் நெருங்கும் சமயத்தில் பாஜக மேலிடம் ஏன் இதில் தாமதம் செய்கிறது என்று தெரியவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜனிடம் கேட்டபோது, ‘‘பொதுக் குழு, செயற்குழுக் கூட் டத்தை உடனே நடத்த திட்ட மிட்டிருந்தோம். உள்ளாட்சி இடைத்தேர்தல் வந்ததால் நடத்த முடியவில்லை. கூட்டம் தொடர் பாகவும், புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வது குறித்தும் முன்னாள் தலைவர் பொன்.ராதா கிருஷ்ணனுடன் ஆலோசிக்க வேண்டியிருந்தது. அவர் சமீபத் தில் சுற்றுப்பயணம் மேற்கொண் டிருந்தார். இன்னும் ஒரு வாரத் துக்குள் செயற்குழு, பொதுக் குழுக் கூட்டம் கூட்டப்படும். நிர்வாகிகளும் விரைவில் நியமனம் செய்யப்படுவார்கள்” என்றார்.