Published : 08 Feb 2017 08:17 AM
Last Updated : 08 Feb 2017 08:17 AM

அதிமுக பொதுச்செயலாளரை பொதுக்குழு பரிந்துரைப்பதில் தவறில்லை: பி.எச்.பாண்டியனுக்கு பண்ருட்டி ராமச்சந்திரன் பதில்

கட்சியின் பொதுச்செயலாளரை பொதுக்குழு பரிந்துரைப்பதில் தவறில்லை. அப்படி செய்யக் கூடாது என அதிமுக சட்டத்திலும் இல்லை என அதிமுக மூத்த நிர்வாகி பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்தார்.

முன்னாள் முதல்வர் ஜெய லலிதா மரணம், அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு உள்ளிட்டவை தொடர்பாக சட்டப் பேரவை முன்னாள் தலைவர் பி.எச்.பாண்டியன் சில கருத்துகளை நேற்று தெரிவித்தார். இதையடுத்து, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், அக் கட்சியின் மூத்த நிர்வாகி பண் ருட்டி ராமச்சந்திரன், அமைப்புச் செயலாளர் கே.ஏ.செங்கோட்டை யன் ஆகியோர் நிருபர்களைச் சந்தித்தனர். பண்ருட்டி ராமச் சந்திரன் கூறியதாவது:

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக மிகப்பெரிய நெருக் கடியை சந்தித்து வருவது மறுக்க முடியாத உண்மை. இதை சமா ளிக்க ஒற்றுமையுடன் செயல் பட்டு வருகிறோம். அந்த அடிப்படையில்தான் சசிகலாவை பொதுச்செயலாளராக அறிவித் துள்ளோம். ஆட்சிப் பொறுப்பை யும் ஏற்க வேண்டும் என அவரைக் கேட்டோம். அவரும் ஒப்புக் கொண்டுள்ளார்.

இந்நிலையில், பி.எச்.பாண்டி யன், அவரது மகன் மனோஜ் பாண்டியன் இருவரும் சில கருத் துக்களை வெளியிட்டுள்ளனர். அவரது கருத்துக்கள் உண்மைக்கு மாறானவை. அதிமுக பொதுச் செயலாளர் தேர்வு, சட்டப்படிதான் நடந்துள்ளது.

திமுகவில் எம்ஜிஆர் பொதுச் செயலாளராக இருந்தபோது, சில பொதுக்குழு உறுப்பினர்களால் நீக்கப்பட்டார். அப்போது, தன் னிடம் உதவி பெற்றவர்களே இப்படி செய்கின்றனரே என்று எம்ஜிஆர் வருந்தினார். அதனால்தான், அதிமுகவை தொடங்கும்போது, பொதுச்செயலாளரை கட்சியின் பொது உறுப்பினர்கள்தான் தேர்வு செய்ய வேண்டும் என சட்டவிதிகளை உருவாக்கினார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின், விரைவாக முடிவெடுக்க வேண்டிய சூழலில், பொதுக்குழு ஒருவரை பரிந்துரைப்பதில் தவ றில்லை. அப்படி செய்யக்கூடாது என கட்சி சட்ட விதிகளில் இல்லை. அதேநேரம் பொது உறுப் பினர்களின் உரிமை பறிக்கப்பட வில்லை. இவ்வாறு பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்தார்.

தொடர்ந்து செங்கோட்டையன் கூறியதாவது:

பி.எச்.பாண்டியன்தான் காரணம்

கடந்த 1987-ல் எம்ஜிஆர் மறைவுக்குப் பின் அதிமுக 2 ஆக பிரிந்தபோது, சட்டப்பேரவையில் அப்போதைய முதல்வர் ஜானகி பெரும்பான்மையை நிரூபிக்க வாக்கு சேகரிக்கக் கோரினார். அப்போது குழப்பத்தை ஏற் படுத்தியதே பி.எச்.பாண்டி யன்தான். என்னையும், நெடுஞ் செழியன், திருநாவுக்கரசர், அரங்கநாயகம், பண்ருட்டியார் உள்ளிட்ட 33 உறுப்பினர்களை வெளியேற்றியதால் குழப்பம் ஏற்பட்டது. 20 நாட்களில் சட்டப் பேரவை கலைக்கப்பட்டதற்கும் அவர்தான் காரணம். அதன்பின் கட்சி ஒன்றுபட்டபோதும், இரட்டை இலை சின்னத்துக்காக போராடிய போதும் பி.எச்.பாண்டியன் ஒரு துரும்பைக்கூட கிள்ளிப் போட வில்லை.

கடந்த 1996-ல் ஜெயலலிதா மீது வழக்கு தொடர காரணமாக இருந்தவரும் இவர்தான். ஜெய லலிதா உயிருடன் இருந்தபோது குடும்பத்தில் 5 பேருக்கும் பதவி பெற்ற இவர், இப்போது துரோகி களுடன் சேர்ந்து அறிக்கை விடுகிறார். ஆட்சிக் கட்டிலில் சசிகலா அமர்வதை யாரும் அசைக்க முடியாது. சசிகலாவுக்கு வாய்ப்பு கொடுங்கள். அப்போது தான் அவரது திறமையைப் பார்க்க முடியும்.

இவ்வாறு செங்கோட்டையன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x