

மின்வெட்டு பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், போர்க்கால அடிப்படையில் தமிழக மின் நிலையங்களை பராமரிக்க வேண்டும், என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் வலியுறுத்தியுள்ளார்.
பி.எஸ்.ஞானதேசிகன் சென்னையில் வியாழக்கிழமை நிருபர் களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழகத்தில், மீண்டும் மின்வெட்டு அதிகரித் துள்ளது. இதனால் தொழில் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. புதிதாக தொழில் தொடங்கு வோருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள் ளது. தூத்துக்குடி மின் நிலையம் உள்ளிட்ட பல நிலையங்களில் அடிக்கடி கோளாறு ஏற்படுகிறது.
எனவே, மின்வெட்டுக்கு தீர்வு காணும் வகையில், தமிழகத்திலுள்ள மின் நிலையங்களை போர்க்கால அடிப்படையில் பராமரிக்க வேண்டும். வட மாநிலங்களை தமிழகத்துடன் இணைக்கும், மின் தொகுப்பு பணிகளை யும், மத்திய அரசுடன் இணைந்து ஜனவரிக்குள் முடிக்கு மாறு விரைவுபடுத்த வேண்டும்.
இலங்கைக்கு எதிராக, நாடாளு மன்றத்தில் தீர்மானம் கொண்டு வருவது தொடர்பாக டெசோ கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்துக்கு ஆதரவளிப்பது குறித்து, காங்கிரஸ் மட்டுமே முடிவு செய்ய இயலாது. நாடாளுமன்றத்திலுள்ள அனைத்து கட்சிகளும் கூடி முடிவு செய்ய வேண்டும்.
இலங்கையில் தமிழர்களை சந்தித்ததால், இங்கிலாந்து பிரதமர் கேமரூனுக்கு பாராட்டு கிடைத்ததாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இதில் யாராவது ஒருவருக்கு பாராட்டு கிடைத்தால் மகிழ்ச்சிதான்.
தமிழக, இலங்கை மீனவர் பிரச்சினைக்கான தீர்வு, இரு நாட்டு மீனவர்களும் அதிகாரிகளும் நேரில் சந்தித்து பேசி முடிவு செய்யப்படும். இதற்கான கூட்டத்துக்கு, மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. தமிழக அரசின் ஒத்துழைப்புடன் அடுத்த மாதம் கூட்டம் நடைபெறும்.
வாடிக்கையாளருக்கு பிரச்சி னைகள் ஏற்படாத வண்ணம், ஏ.டி.எம்., மையங்களை பாதுகாப்பான இடங்களில்அ மைக்க வங்கிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாஜக பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, ஒரு பெண்ணின் நடவடிக்கைகளை அரசு அதிகாரிகள் மூலம் வேவு பார்த்துள்ளார்.
இது அபாயகரமானது; கண்டிக்கத் தக்கது என்று அவர் கூறினார்.