கல்லூரி முதல்வர் பணியிடங்களை நிரப்பாவிட்டால் போராட்டம் தொடரும்: தமிழிசை சவுந்தரராஜன் எச்சரிக்கை

கல்லூரி முதல்வர் பணியிடங்களை நிரப்பாவிட்டால் போராட்டம் தொடரும்: தமிழிசை சவுந்தரராஜன் எச்சரிக்கை
Updated on
1 min read

அரசு கலைக் கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்களை ஒரு மாதத்துக்குள் நிரப்பாவிட்டால் போராட்டம் தொடரும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் எச்சரித்துள்ளார்.

கலைக் கல்லூரிகளில் காலி யாக உள்ள முதல்வர் பணியிடங் களை உடனடியாக நிரப்பக்கோரி பாஜக மாநில இளைஞரணி சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப் பட்டது. இதில் தமிழிசை சவுந்தர ராஜன், பாஜக இளைஞரணி மாநிலத் தலைவர் வினோஜ், துணைத் தலைவர் நாகராஜ ரெட்டி, மத்திய சென்னை மாவட்டத் தலைவர் இந்திரன், தென்சென்னை மாவட்டத் தலைவர் ரமேஷ் சிவா, வடசென்னை மாவட்டத் தலைவர் முத்தையா ஆகியோர் கலந்துகொண்டனர்.

பின்னர் நிருபர்களிடம் தமிழிசை கூறியதாவது:

தமிழகத்தில் 89 அரசுக் கலைக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதில் 55 கல்லூரி களில் முதல்வர் பணியிடம் காலியாக உள்ளது. மேலும் 2 ஆயிரம் விரிவுரையாளர்கள் பணியிடங்களும் காலியாக உள்ளன. இதனால், கல்லூரிகளை நிர்வகிப்பதிலும், கற்பித்தலிலும் சிக்கல் ஏற்பட்டு, மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.

8 முதல் 12-ம் வகுப்பு வரை கணினி தொழில்நுட்பம் கற்றுத்தர மத்திய அரசு ரூ.900 கோடி ஒதுக்கியிருந்தது. தொழில்நுட்ப ஆசிரியர்கள் இல்லாத நிலையில் அந்த நிதி பயன்படுத்தப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. பள்ளிக் கட்டிடம் கட்டுவதற்கும், சீரமைப்பதற்கும் வழங்கப்பட்ட ரூ.4,400 கோடி பணம் செலவிடப்படாமல் உள்ளது.

கலைக் கல்லூரிகளில் காலி யாக உள்ள முதல்வர், விரிவுரை யாளர் மற்றும் பள்ளிகளில் ஆசிரி யர்கள், தொழில்நுட்ப ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தையும் ஒரு மாதத்துக்குள் நிரப்ப வேண்டும். நிரப்பாவிட்டால், பாஜகவின் போராட்டம் தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in