

தமிழக பாஜகவின் மேலிடப் பொறுப்பாளரான முரளிதர ராவ் மாற்றப்பட்டு, ராஜீவ் பிரதாப் ரூடி நியமிக்கப்பட்டுள்ளார்.மகாராஷ்டிரம் மற்றும் ஹரியாணா மாநிலத் தேர்தல்களில் பாஜக பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, மற்ற மாநில நிர்வாகிகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
பாஜக தலைவர் அமித்ஷா வெளியிட்ட அறிவிப்பில், தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளரான முரளிதர ராவ் மாற்றப்பட்டு, புதிய பொறுப்பாளராக ராஜீவ் பிரதாப் ரூடி நியமிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.