Last Updated : 10 Aug, 2016 08:34 AM

 

Published : 10 Aug 2016 08:34 AM
Last Updated : 10 Aug 2016 08:34 AM

ஆந்திராவில் கருணை கொலைக்கு அனுமதி கேட்ட 10 மாத குழந்தைக்கு கல்லீரல் மாற்று சிகிச்சை: சென்னையில் நடந்தது

ஆந்திராவில் கருணைக் கொலைக்கு அனுமதி கேட்ட ஏழை விவசாயியின் 10 மாத பெண் குழந்தைக்கு சென்னை யில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட் டத்தைச் சேர்ந்தவர் ரமணப் பா. ஏழை விவசாயி. இவரது மனைவி சரஸ்வதி. இவர்களது 10 மாத பெண் குழந்தை ஞான சாய். இந்த குழந்தை ‘பிலியரி அட்ரீசியா’ என்ற கல்லீரல் பாதிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்தது. குழந்தையைப் பரிசோதித்த டாக்டர்கள் மாற்று கல்லீரல் பொருத்தினால்தான் குழந்தை உயிர் பிழைக்கும் என்றும், அதற்கு ரூ.50 லட்சம் செலவாகும் என்றும் கூறியுள்ளனர். அறுவைச் சிகிச்சை செய்ய பணம் கிடைக்காததால் தங்களது குழந்தையை கருணைக் கொலை செய்ய அனுமதி கேட்டு, தம்பலபல்லி நீதிமன்றத்தில் கடந்த ஜூன் மாதம் அவர்கள் மனு தாக்கல் செய்தனர்.

மனுவை விசாரித்த நீதிபதி, கருணைக் கொலைக்கு அனுமதி வழங்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார். ஊடகங்களில் வெளியான இந்த செய்தியைப் பார்த்த ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, குழந்தையின் உயிரை காப்பாற்றுவதற்கு ஏற்படும் அனைத்து செலவுகளையும் அரசே ஏற்கும் என்று அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள ‘குளோபல்’ மருத்து வமனையில் ஜூன் 27-ம் தேதி குழந்தை அனுமதிக்கப்பட்டது. தந்தையின் கல்லீரலை குழந் தைக்கு பொருத்த டாக்டர்கள் திட்டமிட்டனர்.

அதன்படி இரண்டு நாட் களுக்கு முன்பு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மற்றும் சிகிச்சை துறைத் தலைவர் டாக்டர் முகமது ரேலா தலைமையிலான 6 டாக்டர்கள் குழுவினர் 6 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து குழந்தையின் பாதிக்கப்பட்ட கல்லீரலை அகற்றிவிட்டு தந்தை யிடம் இருந்து எடுக்கப்பட்ட 15 சதவீதம் கல்லீரலை வைத்து விட்டு, குழந்தையின் கல்லீரல் பித்தப்பை இடையே குழாயை வெற்றிகரமாக இணைத்தனர்.

இதுதொடர்பாக இதுதொடர் பாக ‘குளோபல்’ மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறும்போது, ‘‘அறுவை சிகிச்சைக்கு பிறகு குழந்தை நலமாக இருக்கிறது. தந்தையிடம் இருந்து எடுக்கப்பட்ட கல்லீரலும், குழந்தைக்கு வைக் கப்பட்ட கல்லீரலும் இன்னும் 2 வாரங்களில் முழு வளர்ச்சி அடைந்துவிடும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x