

கரூரில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட 2 பெண் மாவோயிஸ்ட் கள், திருச்சி மத்திய சிறையில் நேற்று அடைக்கப்பட்டனர்.
கரூரில் மாவோயிஸ்ட்கள் பதுங்கி உள்ளதாகக் கிடைத்த தகவலின்பேரில், கோவை மற்றும் கரூர் க்யூ பிரிவு போலீஸார் சோதனை மேற்கொண்டு, கரூர் வெங்கமேடு கணக்குப் பிள்ளைத் தெருவில் தங்கியிருந்த, சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியைச் சேர்ந்த கலா(54), சந்திரா(39) ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
அவர்களை கரூர் தாந்தோணி மலை சிவசக்தி நகரில் உள்ள க்யூ பிரிவு அலுவலகத்துக்கு அழைத்துச் சென்ற போலீஸார், நேற்று மதியம் வரை தீவிர விசாரணை நடத்தினர். கரூர் அரசு மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மருத்துவக் குழுவினர், இருவரின் உடல் நிலையையும் பரிசோதித்தனர். இந்நிலையில், கரூர் க்யூ பிரிவு அலுவலகம் முன் ஏராளமானோர் திரண்டதால், அப்பகுதியில் போக் குவரத்து பாதிக்கப்பட்டது.
போலீஸ் விசாரணை முடிந்து, நேற்று மதியம் இருவரும் கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1-ல், மாஜிஸ்திரேட் மோகனவள்ளி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். இருவரை யும் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை காவலில் வைக்க அவர் உத்தரவிட்டார். இதையடுத்து, இருவரும் பலத்த பாதுகாப் புடன் அழைத்துச் செல்லப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக் கப்பட்டனர்.
க்யூ பிரிவு அலுவலகத்திலிருந்து நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டபோதும், பின்னர் திருச்சி மத்திய சிறைக்கு அழைத் துச் செல்லப்பட்டபோதும், கைது செய்யப்பட்ட இருவரும் மாவோ யிஸ்ட் இயக்கத்தை வாழ்த்தி கோஷமிட்டனர்.