Published : 25 Apr 2017 08:13 AM
Last Updated : 25 Apr 2017 08:13 AM

முழு அடைப்பு போராட்ட அறிவிப்பு எதிரொலி: அரசு பேருந்துகளை இயக்க போக்குவரத்து அதிகாரிகள் தீவிரம்

தமிழக விவசாயிகளின் கோரிக் கைகளுக்கு ஆதரவு தெரிவித்து அனைத்து கட்சிகளும் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. இதற்கு தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள் ளிட்ட 10 மத்திய தொழிற்சங்கங் களும், லாரி உரிமையாளர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்துள் ளன. இதனால், தமிழகம் முழுவதும் இன்று அரசு பேருந்துகள் இயக்கப் படுமா? என பொதுமக்களிடம் சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் வழக்கம்போல் இன்று அரசு பேருந் துகள் இயக்கப்படும் என போக்கு வரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார். இதற்கான பணிகளை போக்கு வரத்துக்கழக அதிகாரிகள் மேற் கொண்டுள்ளனர்.

இது தொடர்பாக அரசு போக்கு வரத்துக்கழக அதிகாரிகள் கூறிய தாவது:

முழு அளவில் பேருந்துகளை இயக்க போதிய ஊழியர்கள் உள்ள னர். மொத்தமுள்ள ஊழியர்களில் தினக்கூலி, ஒப்பந்த தொழிலாளர் கள் 25 சதவீதம் பேர் உள்ளனர். இவர்கள் இன்று முழு நேரம் பணி யாற்ற ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இந்த முழு அடைப்பு போராட் டத்தில் பங்கேற்காத அண்ணா தொழிற்சங்க பேரவை உள்ளிட்ட சில சங்கத்தினரும் இன்று பணிக்கு வருவதாக உறுதி அளித்துள்ளனர். எனவே, அரசு பேருந்துகள் இயக்கத் தில் பெரிய பாதிப்பு இருக்காது. நீண்ட தூரம் செல்லும் பெரும்பா லான பேருந்துகள் மாலை 6 மணி முதல் இயக்கப்படும் என்பதால் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளின் சேவையிலும் பாதிப்பு இருக்காது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

தமிழ்நாடு லாரி உரிமையாளர் கள் சம்மேளன தலைவர் ஆர்.சுகு மார் கூறும்போது, ‘‘விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரி வித்து இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையில் தமிழகம் முழுவதும் 3 லட்சம் லாரிகள் ஓடாது. இதேபோல், சென்னை துறைமுகத் தில் இருந்து செல்ல வேண்டிய 5 ஆயிரம் கன்டெய்னர் லாரிகளும் நிறுத்தி வைக்கப்படும்’’ என்றார்.

இது தொடர்பாக சிஐடியு மாநில துணை பொதுச் செயலாளர் எஸ்.பாலசுப்பிரமணியம், ‘‘தமிழ கம், புதுச்சேரியில் இன்று நடக் கும் முழு அடைப்பு போராட் டத்தில் ஒட்டுமொத்த ஆட்டோ தொழிற்சங்கங்களும் பங்கேற் கின்றன. இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருக்கும் 2 லட்சத்து 35 ஆயிரம் ஆட்டோக் களும் ஓடாது. இதற்கான அறிவிப்பு நோட்டீஸ்களை ஆட்டோக் களிலும், ஆட்டோ நிறுத்தங்களிலும் ஒட்டியுள்ளோம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x