

நாட்டில் மிக தூய்மையான நகரங் கள் பட்டியலில் மத்திய பிரதேசத் தின் இந்தூர் நகரம் முதலிடம் பிடித்துள்ளது. மிக அசுத்தமான நகர மாக உத்தரபிரதேசத்தின் கோண்டா நகரம் உள்ளது தெரிய வந்துள்ளது. மிக சுத்தமான நகரங்களில் தமிழகத்தின் திருச்சி நகரம் 6-வது இடத்தைப் பிடித்துள்ளது.
நாட்டில் உள்ள 434 நகரங்களின் தூய்மை குறித்து மத்திய அரசு ஆய்வு செய்தது. அதன் முடிவு களை மத்திய நகர்ப்புற மேம் பாட்டுத் துறை அமைச்சர் வெங் கய்ய நாயுடு டெல்லியில் நேற்று அறிவித்தார். அதன் விவரம் வருமாறு:
‘நாட்டில் தூய்மையான நகரங் கள் - 2017’ குறித்து 434 நகரங் களில் புள்ளிவிவரம் எடுக்கப்பட்டது. இதில் திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாமை, திடக்கழிவுகள் மேலாண்மைக்கு (சாலைகளைச் சுத்தப்படுத்தல், குப்பை சேகரித் தல், அதை வேறு இடத்துக்கு வாக னங்களில் எடுத்துச் செல்லுதல், குப்பைகளைப் பிரித்து மறுசுழற்சி செய்தல் உட்பட) 45% மதிப்பெண் வழங்கப்பட்டது.
நகரின் தூய்மையை தொடர்ந்து ஆய்வு செய்வதற்கு 25% மதிப்பெண் மற்றும் குடிமக்களின் கருத்துகளுக்கு 30% மதிப்பெண் என நிர்ணயம் செய்யப்பட்டது. அதன்படி நாடு முழுக்க 18 லட்சத் துக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் நகரம் குறித்த கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.
இவற்றின் அடிப்படையில் எடுக்கப்பட்ட ஆய்வில் மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரம் மிக தூய்மையானது என்று முதலிடம் பிடித்துள்ளது. இதே மாநிலத்தின் போபால் நகரம் 2-வது இடம்பெற்றுள்ளது. தூய்மை நகரங்கள் தர வரிசையில் ஆந்திரா வின் விசாகப்பட்டினம் 3-வது இடத் தையும், குஜராத்தின் சூரத் நகரம் 4-வது இடத்தையும் பிடித்துள்ளது.
கடந்த 2015-ம் ஆண்டு தூய்மையான நகரங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த கர்நாடகாவின் மைசூரு, இந்த ஆண்டு 5-வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தின் திருச்சி நகரம் 6-வது இடத்தைப் பிடித்துள்ளது. டெல்லி 7-வது இடத்தில் உள்ளது.
தூய்மையான முதல் 50 நகரங்கள் பட்டியலில் குஜராத் 12, ம.பி.11, ஆந்திரா 8, தெலங்கானாவில் தலா 4 நகரங்கள் இடம்பிடித்துள்ளன.
உத்தரபிரதேசத்தின் கோண்டா நகரம் மிக அசுத்தமான இடத்தைப் பிடித்துள்ளது.
மத்திய அரசு நடத்திய ‘ஸ்வாச் சர்வேக் ஷன்’ புள்ளிவிவர ஆய்வில் பங்கேற்க மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ஒப்புக் கொள்ளவில்லை. அதனால், அந்த மாநிலத்தைச் சேர்ந்த நகரங்களில் ஆய்வு நடத்தப்படவில்லை.
இந்த புள்ளிவிவரத்தின்படி உ.பி.யின் 4 நகரங்கள், பஞ்சாப், பிஹாரில் தலா 2, உத்தராகண்ட், மகாராஷ்டிராவில் தலா ஒரு நகரம் மிகமிக அசுத்தமான நகரங்கள் என்று தெரிய வந்துள்ளது.
ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் நகரங்களின் தூய்மை விஷயத்தில் சற்று முன்னேற்றம் கண்டுள்ளன. ஆனால், பிஹார், உ.பி. ஆகிய மாநில நகரங்களின் நிலை கவலை அளிக்கிறது.
உத்தரபிரதேசத்தில் 62 நகரங் களில் சேகரித்த புள்ளிவிவரத்தில் 50 நகரங்கள், 305 மற்றும் அதற்கு கீழ்தான் இடம்பிடித்துள்ளன. இதில் பிரதமர் மோடியின் வாரணாசி நகரம் மட்டும்தான் 32-வது இடத்தைப் பிடித்துள்ளது. மற்ற நகரங்கள் எல்லாம் 100-வது இடத்துக்குக் கீழ்தான் உள்ளன.
பிஹாரைப் பொறுத்த வரையில் 27 நகரங்களில், 17 நகரங்கள் 300-வது இடத்துக்கும் கீழ் உள்ளன. ஒட்டுமொத்தமாக எல்லா நகரங்களும் 100-வது எண்ணுக்கு கீழ்தான் உள்ளன.
தமிழக நகரங்கள்
தமிழக நகரங்களைப் பொருத்த வரை மதுரை 57-வது இடத்தையும், தாம்பரம்-62, திருப்பூர்-68, ஓசூர்-82, வேளாங்கண்ணி-84, திண்டுக்கல்- 106, வேலூர்-108, காரைக்குடி-110, புதுக்கோட்டை-113, ராஜபாளை யம்-125, காஞ்சிபுரம்-127, சேலம்-135, பல்லாவரம்-155, ஆவடி-169, நாகர் கோவில்-174, நாகப்பட்டினம்-185, திருநெல்வேலி-193, தஞ்சாவூர்-198, தூத்துக்குடி-223, சென்னை-235, திருவண்ணாமலை-238, கடலூர்-250, ஆம்பூர்-267, ராமேஸ்வரம் 268-வது இடத்தையும் பிடித்துள்ளன.
இவ்வாறு புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.