ஏப்.28-ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: அன்பழகன் அறிவிப்பு

ஏப்.28-ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: அன்பழகன் அறிவிப்பு
Updated on
1 min read

ஏப்ரல் 28-ம் தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் வருகிற 28-4-2017 வெள்ளிக்கிழமை காலை10.00 மணி அளவில், சென்னை, அண்ணா அறிவாலயம், கழக அலுவலகத்தில் நடைபெறும்.

கட்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்படவிருப்பதால் மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in