

கானகன் நாவல் எழுதியதற்காக எழுத்தாளர் லட்சுமி சரவணகுமாருக்கு சாகித்ய அகாடமியின் யுவ புரஸ்கார் விருது வழங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சாகித்ய அகாடமி சார்பில் 21 மொழிகளில் பால சாகித்ய புரஸ்கார் விருதும், 24 மொழிகளில் யுவ புரஸ்கார் விருதும் வழங்கப்படுகிறது.
தமிழில் குழந்தைகள் இலக்கியத்தில் பங்களித்ததற்காக குழ. கதிரேசனுக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது வழங்கப்படுகிறது.
கானகன் நாவல் எழுதியதற்காக இளம் எழுத்தாளர் லட்சுமி சரவணகுமாருக்கு யுவ புரஸ்கார் விருது வழங்கப்படுகிறது.