கடற்கரை காந்தி சிலை அருகே ஸ்டாலின் போராட்டம்: எம்எல்ஏக்கள் உட்பட ஏராளமானோர் கைது

கடற்கரை காந்தி சிலை அருகே ஸ்டாலின் போராட்டம்: எம்எல்ஏக்கள் உட்பட ஏராளமானோர் கைது
Updated on
1 min read

சட்டப்பேரவையில் திமுகவினர் தாக்கப்பட்டதாகக் கூறி, கடற்கரை காந்தி சிலை அருகே ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடத்திய எம்எல்ஏக்கள் உட்பட ஏராளமானோரை போலீஸார் கைது செய்தனர்.

சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை ரகசியமாக நடத் தக் கோரியும், வாக்கெடுப்பை ஒத்திவைக்கக் கோரியும் திமுக வினர் அமளியில் ஈடுபட்டனர். அத னைத் தொடர்ந்து திமுக எம்எல்ஏக் களை அவைக் காவலர்கள் குண்டுக்காட்டாக தூக்கி வந்து வெளியேற்றினர். அப்போது திமுக எம்எல்ஏக்கள் தாக்கப்பட்டதாக பின்னர் ஸ்டாலின் பேட்டியளித்தார்.

இதைக் கண்டித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக எம்எல்ஏக் கள், கட்சி நிர்வாகிகள், தொண் டர்கள் திடீரென மெரினா கடற் கரையில் உள்ள காந்தி சிலை அருகில் நேற்று மாலை கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதை அறிந்த கட்சியின் நிர்வாகிகள் பலர் காரில் வந்து, அங்கு இறங்கியதால், விவேகானந்தர் இல்லத்திலிருந்து கலங்கரை விளக்கம் வரை சாலையில் கார்களாக காட்சியளித்தன.

சிறிது நேரத்தில் ஆயிரக்கணக் கானோர் அங்கு திரண்டனர். இதையடுத்து, 300-க்கும் மேற்பட்ட அதிரடிப்படை போலீஸார் குவிக் கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, அங்கு சென்னை மாநகர காவல் கூடுதல் ஆணையர் சங்கர், இணை ஆணையர்கள் மனோகரன், அன்பு, துணை ஆணையர் பாலகிருஷ்ணன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட எம்எல்ஏக்களிடம் பேச்சுவார்தை நடத்தி, போராட்டத்தை கைவிடு மாறு கோரினர். அதை ஏற்க மறுத்ததால் ஸ்டாலின் உட்பட திமுக எம்எல்ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உட்பட ஏராளமா னோரை போலீஸார் கைது செய்து வாகனத்தில் ஏற்றினர்.

போலீஸ் வாகனம் சிறைபிடிப்பு

அதற்கு எதிர்ப்பு தெரிவித்த தொண்டர்கள், ஸ்டாலின் அமர்ந் திருந்த வாகனத்தின் முன் அமர்ந் தும், அந்த வாகனத்தின் மீது ஏறியும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக பொதுச்செயலர் சசிகலா, பேரவைத் தலைவர் தனபால், போலீஸார் ஆகியோருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். கைது செய்யப்பட்ட அனைவரையும் மயிலாப்பூரில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைத்தனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

போக்குவரத்து ஸ்தம்பிப்பு

மெரினாவில் காந்தி சிலை அருகே தொடர்ந்து ஏராளமானோர் திரண்டதால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதைத் தவிர்க்க, காமராஜர் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அடையாரில் இருந்து பாரிமுனை நோக்கி சென்ற வாகனங்கள் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை வழியாக மாற்றி விடப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in