

சென்னையில் வீட்டை வாட கைக்கு விடும் விவகாரத்தில் வீட்டு உரிமையாளர்களை இடைத் தரகர்கள் ஆசை வார்த்தை கூறியும், மிரட்டியும் தங்கள் வசம் வைத்திருப்பதாக புகார் தெரி விக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ‘தி இந்து’ வாசகர் ஒருவர் உங்கள் குரல் மூலம் தகவல் தெரிவித்தார். அது குறித்து விசாரித்தபோது அதிர்ச்சி யான பல தகவல்கள் கிடைத்தன.
சென்னை போன்ற பெருநகரங் களில் ஏராளமானோர் வாடகை வீடுகளில்தான் வசிக்கின்றனர். ஏழைகளாக இருந்தால் அவர்க ளுக்கு அரசு சொந்தமாக வீடு கட்டிக் கொடுக்கிறது. வசதி யானவர்கள் தங்களுக்குப் பிடித்த இடத்தில் இடம் வாங்கி, ரசனைக்கேற்ப வீடு கட்டிக்கொள் கிறார்கள்.
ஆனால், நடுத்தர மக்களுக்கு இப்போது வாடகை வீடு பெரும் பிரச்சினையாக உள்ளது. ஆண்டு தோறும் வாடகை உயர்த்தப் படுவது, அதிகபட்சம் 3 ஆண்டு கள் மட்டுமே வாடகைக்கு இருக்க அனுமதிப்பது போன் றவை வாடகை வீட்டில் இருப்ப வர்களுக்கு பெரும் தலைவலி யாக மாறியிருக்கிறது. இது மட்டுமல்லாமல் இடைத்தரகர் களின் அதிகாரம் தூள் பறக் கிறது. அதாவது, வீட்டை வாட கைக்கு விடும் வேலையை வீட்டு உரிமையாளர்கள் இடைத் தரகர்களிடம் கொடுத்து விடு கின்றனர்.
இதுகுறித்து பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் கூறிய தாவது:
நான் மயிலாப்பூரில் 30 ஆண்டு களாக வசித்து வருகிறேன். இங்கே வாடகை வீட்டில் அதிகபட்சம் 3 ஆண்டுகள் வரைதான் இருக்க அனுமதிக்கின்றனர். ஒவ்வொரு தடவையும் வாடகை வீடு தேடும்போது, வீட்டு உரிமையாளர்கள், இடைத் தரகர்களை அணுகும்படி கூறு கின்றனர். அவர்களை அணு கினால் ரூ.8 ஆயிரம் வாடகை கொடுக்கத் தகுதியான வீட்டை ரூ.15 ஆயிரம் என்கின்றனர். அத் துடன் ஒரு மாத வாடகையை ரொக்கமாக கொடுத்தால்தான் வீடு கிடைக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 3 வீடு மாறிவிட்டதால் இடைத்தரகர்களுக்கு மட்டும் ரூ.30 ஆயிரத்துக்கு மேல் கொடுத் திருக்கிறேன். வாடகை வீடு பிடித்துக் கொடுப்பதை பெரிய வர்த்தகமாகவே அவர்கள் மாற்றி யுள்ளனர். வீட்டு உரிமையாளரிடம் போய் “உங்களுக்கு நிறைய வாடகை பெற்றுத் தருகிறேன்” என்று சொல்லி அவர்களை ஒப்புக்கொள்ளச் செய்கின்றனர். இல்லாவிட்டால், “நீங்கள் நேரடியாக வீட்டை வாடகைக்கு விட்டால் அதற்கான விளைவு களைச் சந்திக்க நேரிடும்” என்று பகிரங்கமாகவே மிரட்டி காரியம் சாதிக்கின்றனர்.
சென்னையில் குறிப்பாக திருவல்லிக்கேணி, மயிலாப்பூரில் இடைத்தரகர்களின் ஆதிக்கம் மிக அதிகம். இதன் காரணமாக நடுத்தர குடும்பத்தினர் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலை நீடித்தால், சென்னையில் இடைத்தரகர்கள் இல்லாமல் வீடு வாடகைக்கு பிடிப்பது சாத்தியமில்லாமல் போய்விடும் அபாயம் உள்ளது என்றார் அவர்.