

* சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார், புழல் சிறையில் மின்கம்பியை கடித்து தற்கொலை செய்துகொண்டதாக சிறைத்துறை அறிவித்துள்ளது. | முழு விவரம் >>சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் சிறையில் தற்கொலை: மின் கம்பியை கடித்து இறந்ததாக சிறைத்துறை விளக்கம்
ராம்குமாரின் தந்தை கதறல்
* "என் மகனை கொலை செய்துவிட்டனர்" என, ராம்குமாரின் தந்தை பரமசிவன் கதறி அழுதபடி தெரிவித்தார். | முழு விவரம் >>சோகத்தில் மூழ்கியது மீனாட்சிபுரம் கிராமம்: என் மகனை கொலை செய்துவிட்டனர் - ராம்குமாரின் தந்தை கதறல்
ராம்குமார் மரணத்தில் வழக்கறிஞர் சந்தேகம்
* ராம்குமார் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது வழக்கறிஞர் ராம்ராஜ் கூறியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியது > >ராம்குமார் மரணத்தில் சந்தேகம்: வழக்கறிஞர் ராம்ராஜ் தகவல் என்கவுன்ட்டர் பயத்தில் ராம்குமார்
* "போலீஸார் என்னை என்கவுன்ட்டர் செய்து விடுவார்களோ' என்று உடனிருந்த கைதிகளிடம் ராம்குமார் கேட்டிருக்கிறார். போலீஸார் எதையாவது செய்துவிடுவார்கள் என்ற அச்சம் அவருக்குள் இருந்திருக்கிறது. கைது செய்யப்பட்ட நாளில் இருந்தே மிகுந்த மனப்பதற்றத்தில்தான் அவர் இருந்தார்" என்று சிறை காவலர்கள் தெரிவித்துள்ளனர். | முழு விவரம் >>என்கவுன்ட்டர் பயத்தில் இருந்த ராம்குமார்
தொடர் கண்காணிப்பு
புழல் சிறையின் 2-வது பிளாக்கில் விசாரணை கைதிகள் அறையில் ராம்குமார் அடைக்கப்பட்டிருந்தார். ஏற்கெனவே தற்கொலைக்கு முயன்றவர் என்பதால் மீண்டும் அதுபோன்ற செயலில் ஈடுபடுவதை தடுப்பதற்காக உயர் பாதுகாப்பு பிரிவில் அவர் அடைக்கப்பட்டிருந்தார். எப்போதும் 2 காவலர்கள் ராம்குமார் அறையை கண்காணித்துக் கொண்டே இருப்பார்கள். அவருக்கு சிறையிலேயே தொடர்ந்து கவுன்சலிங் கொடுக்கப்பட்டு வந்தது.
தனிமை சிறையில் அடைத்தால் கூடுதல் மனஅழுத்தம் ஏற்படும் என்பதால் அவருடன் வெங்கடேஷ், இளங்கோ என இரு கைதிகளை சேர்த்து அடைத்திருந்தனர். உடனிருந்த கைதிகளுடன் சில நாட்கள் பேசாமல் இருந்த ராம்குமார், பின்னர் அவர்களுடன் சகஜமாக பாட்டுப்பாடி, பேசி சிரிக்கும் அளவுக்கு நட்பாகி விட்டார்.
சிறைத்துறை விளக்கம்
* சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த ராம்குமார் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.45 மணிக்கு சமையல் அறை மின்பெட்டியில் இருந்த கம்பியை கடித்து மற்றும் கம்பியை உடலில் செலுத்திக் கொண்டு தற்கொலை செய்ததாக சிறைத்துறை விளக்கம் அளித்துள்ளது.
பிரேதப் பரிசோதனை
* சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ராம்குமாரின் உடல் அங்குள்ள பிரேத பரிசோதனைக் கூடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அந்த இடத்தைச் சுற்றிலும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். நுழைவாயில்கள் மூடப்பட்டன. ராம்குமார் இறந்த தகவல் அறிந்து அந்தப் பகுதிகளில் வசிக்கும் நூற்றுக்கணக்கான மக்கள் மருத்துவமனைக்கு திரண்டு வந்தனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். ஏராளமான செய்தியாளர்களும் குவிந்திருந்தனர். இதனால், ராயப்பேட்டை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ராம்குமார் உடல் பிரேத பரிசோதனை இன்று காலை 10 மணிக்குமேல் நடக்கும் என மருத்துவர்கள் தரப்பில் தெரிவித்துள்ளனர். சுவாதி கொலை வழக்கை விசாரித்து வரும் நுங்கம்பாக்கம் போலீஸார் கூறும்போது, "ராம்குமார் இறந்த செய்தியை சிறைத்துறை அதிகாரிகள் எங்களுக்கு முறைப்படி தெரிவித்துள்ளனர். இது முக்கியமான வழக்கு என்பதால், பிரேதப் பரிசோதனை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்படும். நீதிமன்றத்தில் சுவாதி கொலை தொடர்பாக வழக்கு நடந்துவருவதால், தேவைப்பட்டால் இந்த வீடியோ காட்சிகளை சமர்ப்பிப்போம்" என்றனர்.
நீதி விசாரணை கோரிக்கை
ராம்குமார் மரணம் தொடர்பாக உயர் நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். | விவரம் >>நீதி விசாரணை நடத்த தலைவர்கள் கோரிக்கை
கொலை முதல் 'தற்கொலை' வரை..
ஜூன் 24: நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி படுகொலை.
ஜூலை 1: நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே மீனாட்சிபுரத்தில் ராம்குமார் கைது.
ஜூலை 2: கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற ராம்குமாருக்கு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை.
ஜூலை 3: சென்னை கொண்டுவரப்பட்ட ராம்குமார், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதி.
ஜூலை 5: சிகிச்சை முடிந்து புழல் சிறையில் ராம்குமார் அடைப்பு.
ஜூலை 9: சிறையில் ராம்குமாரை வழக்கறிஞர் எஸ்.பி.ராம்ராஜ் முதல்முறையாக சந்தித்து பேசினார்.
ஜூலை 12: புழல் சிறையில் அடையாள அணிவகுப்பு.
ஜூலை 13: முதல் 15 வரை - போலீஸ் காவலில் ராம்குமாரிடம் விசாரணை.
ஜூலை 15: ராம்குமார் கழுத்தில் போடப்பட்டிருந்த 18 தையல்கள் புழல் சிறை மருத்துவமனையில் பிரிப்பு.
ஜூலை 18: புழல் சிறையில் காணொலி காட்சி மூலம் ராம்குமாரிடம் நீதிபதி விசாரணை.
ஜூலை 29: ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ராம்குமாருக்கு ரத்தப் பரிசோதனை.
ஆகஸ்ட் 8: ராம்குமாரை மீண்டும் ஒருநாள் காவலில் எடுத்து போலீஸ் விசாரணை.
செப்டம்பர் 16: புழல் சிறையில் ராம்குமாரை சந்தித்துப் பேசினார் வழக்கறிஞர் எஸ்.பி.ராம்ராஜ்.
செப்டம்பர் 18: மாலை 4.45 மணிக்கு புழல் சிறையில் மின் கம்பியைப் பிடித்து ராம்குமார் தற்கொலை செய்ததாக அறிவிப்பு.