

சட்டப்பேரவையில் நேற்று பொதுப் பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மானியக் கோரிக்கைகள் மீது நடந்த விவாதம் வருமாறு:
விஜயதரணி (காங்கிரஸ்):
பாலாற் றின் குறுக்கில் புதிய அணை கட்டப் பட்டுள்ளது தொடர்பாக உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள் ளது. இது தொடர்பாக ஏற்கெனவே ஒரு வழக்கு உள்ளதால் 2 வழக்குகளையும் சேர்த்து நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் உச்ச நீதிமன்றத்தில் நம் எதிர்ப்பு பதிவாகும்.
அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி:
வழக்குகளை உச்ச நீதிமன்றம்தான் இணைக்க முடியும். தடுப்பணை விவகாரம் தொடர்பாக, 1892-ம் ஆண்டு ஒப்பந்தத்தை சுட்டிக்காட்டி, ஆந்திர முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதினார். அதன்பின், தமிழக தலைமைச் செயலாளரும், தடுப்பணை உயரத்தை அதிகரிக்கக் கூடாது என ஆந்திர தலைமைச் செயலருக்கு கடிதம் மூலம் அறிவுறுத்தினார். இவற்றுக்கு பதில் இல்லாததால்தான் வழக்கு தொடரப்பட்டது.
துரைமுருகன் (திமுக):
நீதிமன்றத் தில் வழக்கு தொடரப்பட்டால் எவ் வளவு நாள் ஆகும். தடுப்பணை விவகாரத்தில் தற்போது இருக்கும் நிலையே தொடரவேண்டும் என்பது போல நீங்கள் தடை உத்தரவு பெற் றிருக்க வேண்டும் அல்லது பேச்சு வார்த்தை மூலம் தீர்வு கண்டிருக்க வேண்டும். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை பொதுப் பணித்துறை அமைச்சர் சந்தித்து அறிவுறுத்தி இருக்க வேண்டும். அவர் நிச்சயம் ஒப்புக் கொள்வார். தமிழகத்துக்கு ஆதரவானவர் அவர். அவர் தொகுதியில்தான் தடுப்பணைகளும் வருகின்றன.
அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி:
ஆந்திர முதல்வருக்கு ஜூலை 1-ம் தேதி எழுதிய கடிதத்துக்கு பதில் வராததால்தான் வழக்கு தொடரப்பட்டது.
இவ்வாறு விவாதம் நடந்தது.