

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நகைகளை வாங்குவதில் பொது மக்கள் நேற்று அதிக ஆர்வம் காட்டினர். இதனால் நகை கடை களில் கூட்டம் அதிகமாக இருந் தது. 30 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளதாக நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க பொதுசெயலாளர் எஸ்.சாந்தகுமார் ‘தி இந்து’விடம் கூறும் போது, “ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு செல்வத்தை சேர்க்கும் விதமாக நகைகளை வாங்குவது சிலரின் நம்பிக்கையாக உள்ளது. இதன் காரணமாக நகைக்கடை களில் கூட்டம் அதிகமாக இருந்தது. தி.நகர், புரசைவாக்கம், வடபழனி உள்ளிட்ட இடங்களில் நகைகள் வாங்க பொதுமக்கள் அதிகளவில் வந்து சென்றனர்.
இதனால் 30 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது. மத்திய அரசு சமீபத்தில் அறிவித்துள்ள தங்க முதலீடு திட்டத்தால் மக்களிடம் இருக்கும் தங்கம் முதலீடாக மாற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால், தங்க இறக்குமதியும் குறைந்துள்ளதால், தங்கத்தின் விலை உயர்வு இந்த ஆண்டு கட்டுக்குள் இருக்கும் என நம்புகிறோம்’’ என்றார்.