

ஜல்லிக்கட்டு தொடர்பாக அவசரச் சட்டம் கொண்டுவர வலியுறுத்தி பிரதமர் மோடியை அதிமுக எம்.பி.க்கள் இன்று சந்தித்து மனு அளிக்கின்றனர்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டியை இந்த ஆண்டாவது நடத்தி விட வேண்டும் என்று தமிழக அரசு தீவிரமாக முயற்சித்து வருகிறது.
ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அவசர சட்டம் பிறப்பிக்குமாறு பிரதமருக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் கடிதம் எழுதினார்.
இதைத் தொடர்ந்து, மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை தலைமையில் அதிமுக எம்.பி.க்கள் இன்று பிரதமரை சந்தித்து, ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவது தொடர்பாக மனு அளிக்கின்றனர். அப்போது, அவசரச் சட்டம் பிறப்பிக்க வலியுறுத்துவார்கள் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.