Published : 13 Dec 2013 17:01 pm

Updated : 06 Jun 2017 16:10 pm

 

Published : 13 Dec 2013 05:01 PM
Last Updated : 06 Jun 2017 04:10 PM

தமிழக மீனவர்கள் 140 பேர் இலங்கை சிறையிலடைப்பு

140

இலங்கை கடற்படையினரால் புதன் மற்றும் வியாழக்கிழமை சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 140 பேருக்கு இலங்கை நீதிமன்றங்கள் காவலில் வைக்க உத்திரவிட்டது.

இலங்கை முல்லைத்தீவு கடற்பகுதியில் புதன்கிழமை மீன்பிடித்தாகக் கூறி 110 நாகப்பட்டினம் மாவட்ட மீனவர்கள் இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து அவர்களின் 15 விசைப்படகுகளையும், வலைகளையும் பிடித்து வைத்திருந்த மீன்களையும் கைப்பற்றினர்.


சிறைப்பிடிக்கப்பட்ட 110 நாகப்பட்டினம் மாவட்ட மீனவர்களையும் திரிகோணமலை காவற்துறையினரிடம் இலங்கை கடற்படையினர் புதன்கிழமை இரவு ஒப்படைத்தனர்.

பின்னர் திரிகோணமலை நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை 110 நாகப்பட்டினம் மீனவர்களும் ஆஜர்படுத்தப்பட்டனர். மீனவர்களை விசாரித்த திரிகோணமலை நீதீமன்ற நீதிபதி மீனவர்களை டிசம்பர் 24 ஆம் தேதி வரையிலும் நீதிமன்றக் காவலில் வைக்க உத்திரவிட்டார். அதனைத் தொடர்ந்து மீனவர்கள் திரிகோணமலை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.

அதேப் போன்று வியாழக்கிழமை அதிகாலை நெடுந்தீவுப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 30 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினர் சிறைப்பிடித்து, அவர்களின் 8 விசைப்படகுகள், வலைகள், பிடித்து வைத்திருந்த மீன்களையும் கைப்பற்றினர்.

பின்னர் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மாவட்ட 30 மீனவர்களையும் காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்று காங்கேசன்துறை காவல்துறையினரிடம் புதன்கிழமை மாலை ஒப்படைத்தனர்.

அதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மீனவர்களை விசாரித்த மல்லாகம் நீதிபதி கஜநிதி பாலன் மீனவர்களை டிசம்பர் 17 ஆம் தேதி வரையிலும் காவலில் வைக்க உத்திரவிட்டார். அதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 30 பேரும் யாழ்பாணம் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

முன்னதாக, கடந்த நவம்பர் 5 இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தைச் சேர்ந்த 17 மீனவர்களுக்கும், ராமேஸ்வரம் தீவைச் சேர்ந்த 13 மீனவர்களுக்கும் வெள்ளிக்கிழமையோடு நீதிமன்ற காவல் முடிவடைந்தது.

எனவே மீண்டும் மல்லாகம் நீதிமன்றத்தில் ஜெகதாப்பட்டிணம் மற்றும் ராமேஸ்வரம் தீவைச் சார்ந்த மீனவர்கள் 30 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். மீனவர்களை விசாரித்த மல்லாகம் நீதிபதி மீண்டும் 30 மீனவர்களுக்கும் நான்காவது முறையாக டிசம்பர் 20 வரை காவலை நீட்டித்து உத்திரவிட்டார். பின்னர் 30 மீனவர்களும் யாழ்பாணம் சிறைச்சாலையில் மீண்டும் அடைக்கப்பட்டனர்.


இலங்கை கடற்படைதமிழக மீனவர்கள்இலங்கை நீதிமன்றம்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x