

திருப்பூர் வெள்ளியங்காடு கோபால் நகரைச் சேர்ந்த பின்ன லாடை தொழிலாளி கணேசன் மகன் சரவணன்(24). இவர், கடந்த ஜூலை மாதம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில், எம்.டி. பொது மருத்துவப் படிப்பில் சேர்ந்தார். கல்லூரியில் சேர்ந்த 10 நாட்களுக்குள், ஹோஸ் ஹவுஸ் பகுதியில் தங்கியிருந்த அறையில் அவர் சடலமாக மீட்கப்பட்டார்.
இந்த விவகாரத்தில் நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத் தக் கோரி, சரவணனின் தந்தை கணேசன் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் கடந்த வாரம் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக சரவணனின் குடும்பத்தினர் ‘தி இந்து’விடம் கூறும்போது, “சரவணனின் மரணத்தில் உண்மையை வெளிக் கொண்டுவர தொடர்ந்து போராடி வருகிறோம். முதல் தகவல் அறிக்கை மற்றும் பிரேதப் பரி சோதனை அறிக்கையை 4 வாரங் களுக்குள் எங்களிடம் ஒப்படைக் கும்படி, டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இந்த வழக்கு நவம்பர் 10-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது” என்றனர்.