தமிழகத்தில் பல்வேறு துறைகளில் உள்ள 2 லட்சம் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: அரசுப் பணியாளர்கள் சங்க மாநிலக் குழு தீர்மானம்

தமிழகத்தில் பல்வேறு துறைகளில் உள்ள 2 லட்சம் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: அரசுப் பணியாளர்கள் சங்க மாநிலக் குழு தீர்மானம்
Updated on
1 min read

தமிழகத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 2 லட்சம் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க மாநிலக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க சிறப்பு மாநிலக் குழு கூட்டம் திருச்சியில் நேற்று நடைபெற்றது. அதில், சங்க மாநிலத் தலைவ ராக செல்வராஜ், பொதுச் செயலா ளராக அறவாழி, பொருளாளராக பிச்சைமுத்து, அமைப்புச் செயலா ளராக எட்வர்டு ஜெயசீலன், பிரச் சார செயலாளராக சுந்தர்ராஜா, தலைமை நிலையச் செயலாளராக நாகராஜன் தேர்வு செய்யப் பட்டனர்.

செப்.2-ம் தேதி தேசிய அளவில் நடைபெறும் பொது வேலைநிறுத்தத்தில் பங்கேற்பது. தமிழக அரசு ஊழியர்களுக்கு 8-வது ஊதிய மாற்றத்துக்கான பணிகளை உடனே தொடங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்து ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

தமிழக அரசுத் துறைகளில் காலி யாக உள்ள 2 லட்சம் பணியிடங் களை உடனடியாக நிரப்ப வேண் டும். ஒப்பந்த செவிலியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். தொகுப்பூதியம், மதிப்பூதியம், தினக்கூலி, ஒப்பந்த முறை, பகுதி நேர பணி ஆகிய முறைகளில் பணி நியமனங்கள் செய்வதை தமிழக அரசு கைவிட வேண்டும்.

பதவி உயர்வில் உள்ள முரண் பாடுகளைக் களைய வேண்டும். சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை, பணி வரன்முறை செய்ய வேண்டும். அரசு பணியாளர்களின் பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்ய கூட்டு ஆலோசனைக் குழு அமைக்க வேண்டும். பொது கலந்தாய்வு மூலம் பணியிட மாறுதல் அளிக்க வேண்டும். தமிழ்நாடு நிர்வாகத் தீர்ப்பாயம் ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர் மாநிலத் தலைவர் செல்வராஜ் செய்தியாளர்களிடம் கூறும்போது, “1981-ல் தோற்றுவிக்கப்பட்ட இந்த சங்கம் அரசுப் பணியாளர்களுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளது. இடைப்பட்ட காலத்தில், இதன் தலைவராக இருந்த கு.பாலசுப்பிரமணியனின் தவறான நடவடிக்கைகளால் சங்கம் பிளவுபட்டு, அதே பெயரில் 5 குழுக்களாகச் செயல்பட்டு வந்தது. அவை அனைத்தும் இன்று ஒன்றிணைக்கப்பட்டுள்ளன. புதிய மாநில நிர்வாகிகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இனி அரசு ஊழியர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க, அனைவரும் ஒற்றுமையாக குரல் கொடுப்போம்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in