Published : 22 May 2017 11:21 AM
Last Updated : 22 May 2017 11:21 AM

ரூ.10 ஆயிரத்தைத் தொட்ட மதுரைக்கான விமான கட்டணம்: கோடை விடுமுறையால் அதிகரிப்பு

விடுமுறை காலம் என்பதால் உள்ளூர் விமான சேவைகளின் கட்டணங்கள் அதிக அளவு உயர்த்தப்பட்டுள்ளன. சராசரி நாட்களில் விற்கப்படும் விலையை விட 30 % கூடுதல் விலை கொடுத்து பயணிகள் டிக்கெட்டுகளை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் கோடை விடுமுறை இன்னும் சில நாட்களில் முடிவடைய உள்ளது. பெரும்பாலான பள்ளி கல்லூரிகள் ஜூன் முதல் வாரத்தில் தொடங்கப்பட உள்ளதால் விடுமுறைக்கு சென்றவர்கள் மீண்டும் சொந்த ஊருக்குத் திரும்ப தொடங்கியுள்ளனர்.

சென்னை கோவை மதுரை போன்ற மாநகரங்களிலிருந்து வெளியூர் பயணங்களை மேற்கொண்டவர்கள், கடுமையான வெப்பம் காரணமாகவும், ரயில்கள் பேருந்துகளில் போதுமான இடங்கள் கிடைக்காத காரணத்தினாலும் விமானப் பயணத்தை தேர்வு செய்ய தொடங்கியுள்ளனர்.

இதனால் சென்னை கோவை மதுரை உள்ளிட்ட மாநகரங்களிலிருந்து இயக்கப்படும் உள்ளூர் விமான சேவைகளில் தேவை அதிகரித்துள்ளது. இதனை பயன்படுத்தி விமான சேவை நிறுவனங்களும் கட்டணத்தை உயர்த்தியுள்ளன.



இலக்கு

விமான கட்டணம்

கோவை – சென்னை

4,000 – 8,800

திருவனந்தபுரம் – சென்னை

3,500 – 5,600

திருச்சி – சென்னை

6,000 – 7,000

மதுரை – சென்னை

3,400 – 10,800

இன்னும் நாட்கள் நெருங்க நெருங்க பயண கட்டணங்கள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவே விமான சேவை நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x