தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு
Updated on
1 min read

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியதாவது:

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில், வெப்பச் சலனம் காரணமாக, ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை பகல் நேரங்களில் வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும்.

மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை ஒருசில இடங்களில் பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 37 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலையாக 28 டிகிரி செல்சியஸ் இருக்கும். பகல் நேரங்களில் அவ்வப்போது பலத்த தரைக் காற்று வீசும்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in