

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிசி, எம்பிசி பிரிவினர் ‘டாப்செட்கோ’ திட்டத்தில் பொருளாதார ரீதியான கடன் திட்டங்கள் பெறுவதற்கு வரும் 30-ம் தேதிக்குள் விண்ணப் பிக்கவேண்டும்.
இதுகுறித்து, வேலூர் மாவட்ட ஆட்சியர் ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளா தார மேம்பாட்டுக் கழகம் (டாப்செட்கோ) மூலம் பிசி, எம்பிசி பிரிவினருக்கு பொருளாதார ரீதியாக பல்வேறு கடனுதவிகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, தனி நபர் கடன் திட்டத்தில் சிறு வணிகம் செய்வதற்கு அதிக பட்சமாக ரூ.10 லட்சம் கடன் வழங்கப்படும். கடனுக்கு 6-8 சதவீதம் வட்டியும் 3 முதல் 5 ஆண்டு களுக்குள் கடனை திரும்பச் செலுத்தவேண்டும்.
பெண்களின் சுயசார்பு நிலையை வலியுறுத்தும் நோக்குடன் சிறு வணிகம் செய்வதற்கு அதிகபட்சம் ரூ.1 லட்சம் கடனுதவி வழங்கப்படும். இதற்கு 5 சதவீதம் வட்டியும், 3 முதல் 5 ஆண்டுகளுக்கும் கடனை திரும்பச் செலுத்த வேண்டும்.
மகிளா சம்ரிதி யோஜனா திட்டத்தில் தொழில் முனையும் பெண்களுக்கு, சிறுகடன் வழங்கும் நோக்குடன் மகளிர் குழுவின் உறுப்பினர்களுக்கு கடன் வழங்கப்படும். குழுவில் அதிகபட்சமாக 20 உறுப்பினர்கள் இருக்கவேண்டும். ஒருவருக்கு ரூ.50 ஆயிரம் 4 சதவீதம் வட்டியில் கடன் வழங்கப்படும். கடனை 3 ஆண்டுகளில் திரும்பச் செலுத்த வேண்டும்.
ஆண்கள் தனியாக அல்லது குழுக்களாக சிறு தொழில்/வணிகம் செய்வதற்கு சிறுகடன் வழங்கப்படும். ஒருவருக்கு ரூ.50 ஆயிரம் கடனுதவியும் 5 சதவீதம் வட்டியுடன் 3 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்த வேண்டும். கார், வேன், மினிவேன், டிராக்டர் போன்ற போக்குவரத்து வாகனங்களுக்கு அதிகபட்சமாக ரூ.3.13 லட்சம் கடன் 10 சதவீதம் வட்டியில் வழங்கப்படும். கடனை 5 ஆண்டுகளில் திருப்பி செலுத்தவேண்டும்.
கடன் பெறுபவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் கிராமங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தால், ரூ.98 ஆயிரமும், நகரமாக இருந்தால் ரூ.1.20 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும் கடனுதவி வழங்கப்படும். மகளிர் குழுக்கள் தொடங்கப்பட்டு 6 மாதங் கள் முடிந்திருக்கவேண்டும்.
கடனுதவி பெறுவதற்கான விண்ணப் பங்களை வேலூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர், நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் அதன் கிளைகள், தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பத்தை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் வரும் 30-ம் தேதிக்குள் சேர்க்கவேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.
கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர், நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் அதன் கிளைகள், தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.