கோக், பெப்சி புறக்கணிப்பு: அனைத்து கட்சிகளிடமும் ஆதரவு திரட்ட முடிவு- வணிகர் பேரமைப்பு தீர்மானம்

கோக், பெப்சி புறக்கணிப்பு: அனைத்து கட்சிகளிடமும் ஆதரவு திரட்ட முடிவு- வணிகர் பேரமைப்பு தீர்மானம்
Updated on
1 min read

கோக், பெப்சி புறக்கணிப்பு போராட்டத்துக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சித் தலைவர்களையும் நேரில் சந்தித்து ஆதரவு திரட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு முடிவு செய்துள்ளது.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சென்னை மண்டல நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. கூட்டத்துக்கு சென்னை மண்டலத் தலைவர் ஏ.எம்.சதக்கத்துல்லா தலைமை தாங்கினார். மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, பொதுச்செயலாளர் க.மோகன் உள்ளிட்டோர் உரையாற்றினர். இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

பெப்சி, கோக் விற்பனையை மார்ச் 1-ம் தேதி முதல் வணிகர்கள் புறக்கணிக்க வேண்டும். இதற்கான பிரச்சாரங்களை மேற்கொள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் தொகுதி வாரியாக கூட்டம் நடத்தவும், குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் பிரச்சாரம் மேற்கொள்ளவும் தனிக்குழு அமைத்து செயல்படுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், பெப்சி, கோக் புறக்கணிப்பு போராட்டத்துக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சித் தலைவர்களையும் நேரில் சந்தித்து ஆதரவு கேட்கப்படும். இதுதவிர, பொதுநல அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், பல்வேறு துறை களைச் சேர்ந்தவர்களிடமும் ஆதரவு கேட்கப்படும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், பெப்சி, கோக் விற்பனையை புதுச்சேரியிலும் புறக்கணிப்பது என்று முடிவெடுத்ததற்காக புதுச்சேரி அனைத்து வணிகர் சங்க கூட்டமைப்புக்கு பேரமைப்பு சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in