

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பரிந்துரையின்பேரில் புதுச்சேரி சென்டாக் அலுவலகத் தில் நேற்று சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
புதுச்சேரியில் மருத்துவம் மற் றும் பொறியியல் பாடப் பிரிவு களுக்கான இடங்கள் ஆண்டு தோறும் சென்டாக் மூலம் நிரப்பப் படுகிறது. இந்நிலையில் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை யில் தனியார் மருத்துவக் கல்லூரி கள், நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் ஊழல் நடைபெறு வதாக புகார் எழுந்தது. மேலும் நடப்பாண்டு முதுநிலை மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கையிலும் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக ஆளு நரிடத்தில் மாணவர்கள் முறை யிட்டதையடுத்து, துணை நிலை ஆளுநர் கிரண்பேடி கடந்த மே 30-ம் தேதி சென்டாக் அலுவல கத்தில் அதிரடி சோதனையை மேற்கொண்டார். கலந்தாய்வின் போது 71 அரசு ஒதுக்கீட்டு இடங் கள் மறைக்கப்பட்டதை அவர் அப்போது கண்டுபிடித்தார். இதையடுத்து மறு கலந்தாய்வு நடத்தவும் உத்தரவிட்டார். கடந்த 31-ம் தேதி நடைபெற்ற கலந்தாய்வில் 26 இடங்கள் நிரம்பின. மீதியுள்ள 45 இடங்கள் மத்திய சுகாதாரத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டன.
இதையடுத்து மருத்துவ மாண வர் சேர்க்கையில் அரசியல் வாதிகள், அதிகாரிகள், தனியார் கல்லூரி நிர்வாகங்கள் இணைந்து முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது தொடர்பாகவும், சென்டாக் செயல் பாடுகள் குறித்தும் சிபிஐ விசா ரணை மேற்கொள்ள வேண்டும் என ஆளுநர் செயலகம் பரிந் துரைத்தது.
இதனிடையே கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்டாக் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்த இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி இயக்குநர் கோவிந்தராஜ் அதிரடியாக நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக ஊரக வளர்ச்சி முகமை இயக்குநர் ருத்ரகவுடு, சென்டாக் மாணவர் சேர்க்கை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சென்னையில் இருந்து 7 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் குழு நேற்று பிற்பகல் காலாப்பட்டு அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள சென்டாக் அலுவலகத்துக்கு வந்து சோதனை மேற்கொண்டனர். மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பான ஆவணங்களையும் ஆய்வு செய்தனர்.
பின்னர் 2 பெட்டிகள் முழுவதும் முக்கிய ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் தங்கள்வசம் கொண்டு சென்றனர்.