

வட சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை உள் ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மேயர் சைதை துரைசாமி ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.
சென்னையில் கடந்த ஒரு வார காலமாக கன மழை பெய்து வருகிறது. இதனால் நகரின் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இந்நிலையில் தென்சென்னை மற்றும் மத்திய சென்னை பகுதிகளில் நிவாரணப் பணிகளை பார்வையிட்ட உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மேயர் சைதை துரைசாமி ஆகியோர் வடசென்னைக்கு வரவில்லை என்ற குற்றச்சாட்டு அப்பகுதி மக்களிடையே எழுந்தது. இது குறித்து தேவை இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இளங்கோ, மேயருக்கு கடிதமும் எழுதி யிருந்தார்.
இந்நிலையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மேயர் சைதை துரை சாமி ஆகியோர் வட சென்னை யில் நேற்று பல்வேறு பகுதிகளில் ஆய்வுப் பணிகளை மேற் கொண்டு நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தினர். பின்னர் சமூக நலத்துறை அமைச்சர் வளர்மதி, மேயர் சைதை துரைசாமி ஆகி யோர் தி.நகரில் மழை பாதித்த பகுதி களில் ஆய்வு செய்தனர். பலத்த மழை காரணமாக அக்டோபர் 23-ம் தேதி மட்டும் சென்னையில் 16 மரங்கள் விழுந்துள்ளன. மாநகராட்சி அவற்றை உடனுக் குடன் அப்புறப்படுத்தியது.