

தெலுங்கு மக்களின் பண்டிகை யான யுகாதி பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண் டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக ஆளுநரும், முதல் வரும் வாழ்த்துகளை தெரிவித் துள்ளனர்.
ஆளுநர் கே. ரோசய்யா ஞாயிற்றுக்கிழமை வெளியிட் டுள்ள வாழ்த்து செய்தியில் :- யுகாதி திருநாளில் தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் உலகெங்கும் உள்ள தெலுங்கு மொழி மக்களுக்கு என்னுடைய மனமார்ந்த யுகாதி நல்வாழ்த்துகள்.
இந்த நாளில் மக்களிடம் சமாதானமும் சமத்துவமும் ஒற்றுமையும் ஏற்பட வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து
முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள யுகாதித் திருநாள் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
இந்தியாவின் ஒற்றுமையை உலகுக்கு பறைசாற்றும் வண்ணம் சாதி, மத வேறுபாடின்றி பல ஆண்டுகளாக சகோதர, சகோதரிகளாய் தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்கள் மொழியால் வேறுபட்டு இருந்தாலும், தமிழ் மக்களின் இதயத்துடன் இரண் டறக் கலந்து, உள்ளத்தில் ஒன்றிணைந்து, அவர்தம் இன்ப துன்பங்களில் பங் கேற்று நட்புணர்வுடன் பழகி வருகிறார்கள். இது நம் அனைவருக்கும் மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் அளிக்கிறது.
தமிழ் மக்களோடு ஒன்றி, உறவாடி, உவகையுற வாழ்ந்து வரும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவரும் இந்தப் புத்தாண்டில் மேற்கொள்ளும் புதிய முயற்சிகளில் எல்லாம் வெற்றியே பெற்று சீரோடும், சிறப்போடும் வாழ வேண்டும் என்று வாழ்த்தி, அனைவருக்கும் எனது இனிய யுகாதித் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.