மூளைச்சாவு அடைந்த தனியார் நிறுவன ஊழியரின் உடல் உறுப்புகள் தானம்: 14 பேருக்கு மறுவாழ்வு

மூளைச்சாவு அடைந்த தனியார் நிறுவன ஊழியரின் உடல் உறுப்புகள் தானம்: 14 பேருக்கு மறுவாழ்வு

Published on

மூளைச்சாவு அடைந்த தனியார் நிறுவன ஊழியரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. இதன் மூலம் 14 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. இடுப்பு முதல் கால் வரை எடுக்கப்பட்ட தோல் மட்டும் 8 பேருக்கு பயன்படுத்தப்பட்டது.

சென்னையை அடுத்த ஜமீன் பல்லாவரம், பி.வி. ஆச்சாரி தெருவைச் சேர்ந்த வர் சங்கரநாராயணன் (43). தனியார் நிறுவனத்தில் பணி யாற்றி வந்தார். கடந்த 4-ம் தேதி திடீரென இடது கால் செயலிழந்து போனதால், அப்படியே கீழே உட்கார்ந்து விட்டார். அதிகமாக வாந்தி எடுத்த அவரை, உடனடியாக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர்.

டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில், அவரது தலையில் மூளைக்கு செல்லும் ரத்தக்குழாய் வெடித்து ரத்தக் கசிவு ஏற்பட்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். சிகிச்சைக்கு பிறகு, பக்கவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து இஎஸ்ஐ மூலமாக சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனு மதிக்கப்பட்டார். டாக்டர்கள் பரிசோதனை செய்துவிட்டு அவர் மூளைச்சாவு அடைந் ததை உறுதிப்படுத்தினர்.

இதையடுத்து சங்கர நாராயணனின் உடல் உறுப்பு களை தானம் செய்ய விரும்புவ தாக உறவினர்கள் தெரிவித்த னர். அதன்படி அவரது உடலில் இருந்து அறுவை சிகிச்சை மூலம் சிறுநீரகங்கள், கல்லீரல், இதயம், கண்கள் மற்றும் இடுப்பு முதல் கால் வரையுள்ள தோல் ஆகிய வற்றை எடுத்தனர். இதன் மூலம் 14 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in