Published : 02 Jul 2016 08:55 AM
Last Updated : 02 Jul 2016 08:55 AM

தேமுதிக டெல்லி மாநில செயலாளர் நீக்கம்

தேமுதிக டெல்லி மாநிலச் செயலாளர் வி.என்.தட்சிணாமூர்த்தி கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

தேமுதிக டெல்லி மாநிலச் செயலாளர் வி.என். தட்சிணாமூர்த்தி கட்டுப்பாட்டை மீறி, கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். எனவே, அவர் வகித்த வந்த டெல்லி மாநிலச் செயலாளர் பொறுப்பில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்படுகிறார். அவருடன் கட்சியினர் யாரும் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது.

தேமுதிக டெல்லி மாநிலச் செயலாளராக ஜி.எஸ். மணி செயல்படுவார். அவருக்கு கட்சியினர் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தேமுதிக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் பி.டி.அன்பரசன் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.

இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x