

கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மகன் ராகேஷ் மரணமடைந்ததற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ''கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையாவின் மகன் ராகேஷ் 30.07.2016 அன்று இயற்கை எய்தினார் என்ற செய்திகேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
ராகேஷை இழந்து வாடும், சித்தராமையாவுக்கும், அவரது குடும்பத்தாருக்கும், எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்'' என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.