

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று மீண்டும் மலேசியாவுக்கு புறப்பட்டுச் சென்றார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் சில மாதங்களுக்கு முன்பு மலேசியா சென்று திரும்பினார். மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள பிரபல மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றதாக கூறப்பட்டது.
இந்நிலையில், விஜயகாந்த் நேற்று காலை 11.15 மணிக்கு ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம் மலேசி யாவுக்கு புறப்பட்டுச் சென்றார். மனைவி பிரேமலதா, மகன் சண்முக பாண்டியன், மைத் துனர் சுதீஷ் ஆகியோரும் உடன் சென்றுள்ளனர்.
விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் ‘சகாப்தம்’ படத்தின் படப்பிடிப்பு மலேசியா, சிங்கப்பூரில் நடந்துவருகிறது. படப்பிடிப்பு நடக்கும் இடங்களை பார்வையிடவே விஜயகாந்த் சென்றுள்ளதாக தேமுதிக மூத்த நிர்வாகிகள் கூறினர்.