

அதிமுகவில் மாவட்ட வாரியாக ஆலோசனைக் கூட்டங்கள் இன்று தொடங்க உள்ள நிலையில், பொதுச்செயலாளர் சசிகலாவை நேற்று தம்பிதுரை, செங்கோட்டையன், கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
முன்னாள் முதல்வர் ஜெய லலிதாவின் மறைவுக்குப் பின், அதிமுக பொதுச்செயலாளராக அவரின் தோழி வி.கே.சசிகலா பொறுப்பேற்றுள்ளார். பொதுச் செயலாளராக பொறுப்பேற்க சசி கலாவுக்கு வரவேற்பு தெரிவித்த அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகி கள், தற்போது முதல்வர் பொறுப் பையும் ஏற்க வேண்டும் என வேண்டு கோள் விடுத்து வருகின்றனர். இந் நிலையில், 4-ம் தேதி (இன்று) முதல் வரும் 9-ம் தேதி வரை மாவட்ட வாரியாக மாவட்ட செய லாளர்கள், ஒன்றிய, நகர, பேரூ ராட்சி மற்றும் பகுதிக்கழக செய லாளர்கள், பொதுக்குழு உறுப் பினர்கள், எம்பி,எம்எல்ஏக்கள், சார்பு அமைப்புகளின் மாவட்ட செயலாளர்கள் பங்கேற்கும் கூட்டம் நடக்கும் என புதிய பொறுப்பை ஏற்றுள்ள பொதுச் செயலாளர் சசிகலா அறிவித்துள்ளார்.
இதற்கிடையி்ல், போயஸ் தோட்ட இல்லத்தில் உள்ள சசி கலாவை, அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் நேற்றும் சந்தித்தனர்.
அதிமுக பொதுச்செயலாளரும் மக்களவை துணைத் தலைவரு மான மு.தம்பிதுரை, தமிழக சட் டப்பேரவைத் துணைத்தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், செல் லூர் கே.ராஜூ உள்ளிட்ட அமைச் சர்கள் , முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.பி.முனுசாமி ஆகியோர் போயஸ்தோட்ட இல்லத்துக்குச் சென்று, சசிகலாவுடன் ஆலோ சனை நடத்தினர்.
மதுரை வடக்குத் தொகுதி அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பாவும் போயஸ்தோட்டத் துக்கு வந்து சசிகலாவை சந்தித் தார். பொதுமக்கள் மற்றும் கட்சியினர் போயஸ் தோட்ட இல்ல வாயில் வரை நேற்று அனுமதிக்கப்பட்டனர்.
இதற்கிடையில் இன்று தலைமை அலுவலகத்தில் நடக்கும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் சசிகலாவும் பங்கேற்கிறார். பொதுச் செயலாளராக பதவியேற்ற பின் கட்சி நிர்வாகிகளை சந்திக்கும் முதல் கூட்டம் என்பதால், விரி வான வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இதற்கான பணிகளை, முதல் கூட்டத்தில் பங் கேற்கும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திரு வண்ணாமலை மாவட்ட நிர்வாகி கள் செய்துள்ளனர்.
நேற்று இரவு இந்த வரவேற்பு ஏற்பாடுகளை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பார்வையிட்டு, ஆலோ சனைகள் வழங்கினார்.
போஸ்டர்கள் கிழிப்பு
அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்த தின நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இம்மாதம் மாரத்தான் போட்டி நடத்தப்படுகிறது. இதை முன்னிட்டு, ஜெயலலிதா, சசிகலா புகைப்படங்கள் அடங்கிய விளம் பர பேனர்கள் கட்சி அலுவலகம் செல்லும் வழியில் அதிகளவில் வைக்கப்பட்டுள்ளன. இந்த பேனர் களில் சசிகலாவின் புகைப்படங்கள் மட்டும் கிழிக்கப்பட்டிருந்தன. கட்சி அலுவலக வாயிலில் உள்ள பேனரிலும் சசிகலாவின் புகைப்படம் கிழிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.