மேலும் 9 விவசாயிகள் பலி

மேலும் 9 விவசாயிகள் பலி
Updated on
1 min read

விழுப்புரம் அருகே கொங்கராய நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(67). இவர் தனது விவசாய நிலத்தில் உளுந்து, கரும்பு பயிட்டுள்ளார். தண்ணீர் இன்றி பயிர்கள் கருகியதால் மனமுடைந்த ராமகிருஷ்ணன், கடந்த 4-ம் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள ஓலப்பாளையம் கருக்கங்காட்டு தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல்(65). இவர், இரண்டரை ஏக்கர் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து கரும்பு பயிரிட்டுள்ளார். நேற்று முன்தினம் வயலுக்கு சென்ற வர், வீடு திரும்பவில்லை. வயலில் மாரடைப்பால் இறந்தது தெரியவந் தது.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே நல்லப்பநாயக்கன் பாளையம் குன்னமலையைச் சேர்ந்தவர் பழனிச்சாமி(58). தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகியதால் வேதனையடைந்த பழனிச்சாமி மாரடைப்பு ஏற்பட்டதால் இறந்தார்.

நாகை மாவட்டம் வேதாரண் யத்தை அடுத்த பிராந்தியங் கரையைச் சேர்ந்தவர் ரெ.கிருஷ்ண மூர்த்தி(78). இவர், 5 ஏக்கர் நிலத்தில் சம்பா சாகுபடி செய்திருந்தார். பயிர்கள் தண்ணீரின்றி கருகிய தால், மன வேதனையில் இருந்த கிருஷ்ணமூர்த்தி, நேற்று மார டைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந் தட்டையை அடுத்த திருவாலந் துறையைச் சேர்ந்தவர் கணேசன்(59). 5 ஏக்கர் நிலத்தில் பயிரிட்டிருந்த மக்காச்சோளம், பருத்திச் செடிகள் கருகிய வேதனையில் இருந்த இவர், நேற்று தனது வீட்டில் மயங்கி விழுந்தார். மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் அவர் இறந்துவிட்டார்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந் தாங்கி அருகே உள்ள தினையாக் குடியைச் சேர்ந்தவர் பெரி யய்யா(67). இவர், 3 ஏக்கர் குத் தகை நிலத்தில் சாகுபடி செய்திருந்த நெற்பயிர்கள் முற்றிலும் கருகி விட்டன. இதைப் பார்த்த பெரி யய்யா நேற்று மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளார்.

மணமேல்குடி அருகே உள்ள பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து மனைவி காளியம் மாள்(67). இவர், 5 ஏக்கரில் நெல் சாகுபடி செய்திருந்தார். கருகிய பயிர்களை மாடுகள் மேய்ந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த காளி யம்மாள் நேற்று உயிரிழந்தார்.

நாகை மாவட்டம் வேதாரண் யத்தை அடுத்த வாய்மேடு மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி பண்டரிநாதன்(67). இவரது மனைவி செந்தமிழ்செல்வி(58) நேற்று வயலுக்கு சென்றிருந்த நிலையில், அவரது கணவர் விபத்தில் இறந்து விட்டார். இதை அறிந்த செந்தமிழ் செல்வி மயங்கி விழுந்து உயிரிழந் தார். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் சாமனூரைச் சேர்ந்த விவ சாயி கிருஷ்ணமூர்த்தி(45) தனது விவசாய நிலத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in