Last Updated : 22 Apr, 2017 10:48 AM

 

Published : 22 Apr 2017 10:48 AM
Last Updated : 22 Apr 2017 10:48 AM

நாசா ராக்கெட்டில் விண்ணில் செலுத்தப்படும் தமிழக மாணவரின் கையடக்க செயற்கைக்கோள்

தமிழகத்தைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவரான முகமது ரிஃபாக் ஷாரூக் தயாரித்துள்ள கையடக்க செயற்கைக்கோள், நாசா விண்கலம் மூலம் சில மாதங்களில் விண்ணில் செலுத்தப்படவுள்ளது.

இந்த செயற்கைக்கோளை உரு வாக்கியது, அடுத்தகட்ட இலக்கு கள் குறித்து ‘தி இந்து’விடம் முகமது ரிஃபாக் ஷாரூக் கூறிய தாவது:

நான் கரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளப்பட்டி என்ற ஊரைச் சேர்ந்த வன். தற்போது 12-ம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு ரிசல்ட்டுக்காக காத்திருக்கிறேன். எனது தந்தை சிறுவயதிலேயே இறந்துவிட்டார். எங்கள் குடும்பத்துக்கு எனது மாமா மற்றும் உறவினர்கள் உதவி செய்கிறார்கள். சென்னையைச் சேர்ந்த ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பு சில ஆண்டு களுக்கு முன் நடத்திய அறிவி யல் போட்டியில் கலந்து கொண் டேன். அதன்பிறகு எனது அறிவி யல் ஆர்வத்தைப் பார்த்த அந்த அமைப்பினர், தொடர்ந்து அறிவி யல் ஆராய்ச்சிகளைச் செய்ய எனக்கு உதவினர்.

அமெரிக்காவின் நாசா அமைப்பு நடத்திய செயற்கைக்கோள் வடிவ மைப்பு போட்டியில் கலந்துகொள் ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இதில் உலகம் முழுவதும் 57 நாடுகளில் இருந்து 8 ஆயிரத்துக் கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்தப் போட்டியில் தேர்வான 80 பேரில் நான் ஒருவன் மட்டுமே இந்தியன்.

நான் உருவாக்கிய செயற்கைக் கோள் 64 கிராம் எடை கொண்ட தாகும். இந்த செயற்கைக்கோள் முழுவதும் 3டி பிரிண்ட் தொழில் நுட்பத்தில் கார்பன் ஃபைபரால் உருவாக்கப்பட்டது. இந்த செயற் கைக்கோளுக்கு அப்துல் கலாம் நினைவாக ‘கலாம் சாட்’ என்று பெயர் வைத்துள்ளேன். டெக்னாலஜி டெமான்ஸ்ட்ரேட்டர் வகையை சேர்ந்த இந்த செயற்கைக்கோள், விண்வெளியில் நிலவும் கதிர்வீச்சு, அங்கிருக்கும் சூழல், அவற்றால் செயற்கைக்கோள்கள் அடையும் மாற்றம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்யும். இது வெற்றி பெற்றால், விவசாயம், வானிலை ஆய்வு உள்ளிட்ட எந்த வகையான செயற் கைக்கோளையும் குறைந்த செலவி லேயே தயாரிக்கலாம்.

சப்-ஆர்பிட்டல் செயற்கைக் கோளான இதில் 8 சென்சார்கள், ஆன்போர்டு கணினி உள்ளிட்ட நவீன கருவிகள் உள்ளன. இது முழுமையாக இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டது. 240 நிமிடங் கள் விண்ணில் இருக்கும் இந்த செயற்கைக்கோள், பின்னர் கடலில் விழுந்துவிடும். அதனை மீட்டு, மீண்டும் ஆய்வு செய்யலாம்.

இந்த செயற்கைக்கோளை தயாரிக்க ரூ. 1 லட்சம் செலவானது. இதற்கு ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பு உதவியது. விர்ஜீனியா ஏவுதளத்தில் இருந்து எஸ்.ஆர்.4 ராக்கெட் மூலம் ஜூன் மாதம் இது விண்ணில் ஏவப்படவுள்ளது. இவ்வகை செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படுவது இதுவே முதல்முறை.

முகமது ரிஃபாக் ஷாரூக்

அடுத்த இலக்கு

அடுத்ததாக இந்த செயற்கைக் கோளை நிரந்தரமாக விண்வெளி யில் நிலை நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். மேலும் நிலவில் தரையிறங்கும் வகையிலான ரோவர் இயந்திரத்தை தயாரிக்கும் ஆரம்பகட்டப் பணியிலும் இறங்கி யுள்ளேன். அதில் வெற்றி பெறு வேன் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x