மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் அறுவை சிகிச்சைக்காக ரூ.270 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் அறுவை சிகிச்சைக்காக ரூ.270 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
Updated on
1 min read

மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் அறுவை சிகிச்சைகளுக்காக ரூ.270 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளதாக குடும்பநலத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை செம்மைப்படுத்துவதற் கான 2 நாள் கருத்தரங்கம் நேற்று மாமல்லபுரத்தில் தொடங்கியது.

இம்மருத்துவ கருத்தரங்கில் பங்கேற்று சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசியதாவது:

751 மருத்துவமனைகள்

தமிழகத்தில் முதல்வரின் விரி வான மருத்துவக் காப்பீட்டு திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரு கிறது. மருத்துவத் துறையில் ஒரு சிறந்த நகரமாக சென்னை விளங்கி வருகிறது. இங்கு சிகிச்சை பெறுவதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வருகின்றனர்.

இதேபோல் தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய மக்கள் உயர்தர சிகிச்சை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த மருத்துவக் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப் பட்டு வருகிறது. இந்த விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் 1.58 கோடி பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இத் திட்டத்தில் 159 அரசு மருத்துவ மனைகள் உட்பட 751 மருத்துவ மனைகளில் இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இத்திட்டத்தை சிறப்பாக செயல் படுத்த அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள நிரந்தர வைப்பு நிதி ரூ.35 கோடியும், அறுவை சிகிச்சைகளுக்காக ரூ.270 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தை செம்மைப் படுத்தும் நோக்கில் மருத்துவர்கள், இன்சூரன்ஸ் நிறுவன அலுவலர் கள் மற்றும் பலர் பங்கேற்கும் இந்த 2 நாள் கருத்தரங்கம் நடைபெறுகிறது என்றார்.

சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை செயலர் ஜெ.ராதா கிருஷ்ணன் பேசும்போது, “மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் ஏழை மக்கள் பயன்பெறுவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட வேண்டும்” என்றார்.

இந்திய மற்றும் ஹோமியோபதி மருத்துவத் துறையின் ஆணையர் மோகன் பயாரி பேசும்போது, தமிழக அரசு விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் இந்திய மருத்துவ முறைகளையும் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இக்கருத்தரங்கில் பங்கேற்க வந்தவர்களை தேசிய சுகாதார இயக்கத்தின் திட்ட இயக்குநர் தார்ஸ் அஹமது வரவேற்றார். யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஏ.ஹோடா, எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கத்தின் திட்ட இயக்குநர் எஸ்.நடராஜன், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை சிறப்புச் செயலர் பி.செந்தில்குமார், தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழக மேலாண்மை இயக்குநர் அபூர்வா, தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை இணைச் செயலர் ராஜேஸ்வரராவ் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in