

சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதன் மறைவுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதன் என்கிற ராமநாதன் (92) நேற்று முன்தினம் காலமானார். 12 ஆண்டுகள் சிங்கப்பூர் அதிபராக இருந்த அவர், அந்நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றியவர். சிங்கப்பூரின் தந்தை என அழைக்கப்படும் லீ குவான் யூக்கு நெருக்கமான எஸ்.ஆர்.நாதன், அமெரிக்காவுக் கான சிங்கப்பூர் தூதர், சிங்கப்பூர் பல்கலைக்கழக துணைவேந்தர் என பல்வேறு பதவிகளை வகித் துள்ளார். வெளிநாடுவாழ் இந்தி யர்களுக்கு வழங்கப்படும் ‘பிரவாசி பாரதிய சம்மான் விருது’ 2012-ல் இவருக்கு வழங்கப்பட்டது.
எஸ்.ஆர்.நாதன் மறைவுக்கு தமிழக அரசியல் கட்சித் தலை வர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
கருணாநிதி (திமுக தலைவர்):
சிங்கப்பூரின் அதிபராக நீண்ட காலம் இருந்தவரும், சிங்கப் பூரின் தந்தை லீ குவான் யூவின் நெருங்கிய நண்பரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வருமான எஸ்.ஆர்.நாதன் மறைவு செய்தியறிந்து வருந்து கிறேன். மலேசியாவிலும், அமெரிக் காவிலும் சிங்கப்பூரின் தூதராக சிறப்பாகப் பணியாற்றிவர். சிங்கப் பூரின் வளர்ச்சிக்காகப் பெரிதும் பாடுபட்டவர். தொழிற்சங்கத்தி லும் ஈடுபாடு கொண்டு, தொழி லாளர்களின் உயர்வுக்காக உழைத் தவர். எஸ்.ஆர்.நாதனை இழந்து வாடும் அவரது குடும்பத்தி னருக்கும், சிங்கப்பூர் மக்களுக்கும் திமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கி.வீரமணி (திராவிடர் கழகத் தலைவர்):
சிங்கப்பூரின் அதிபராக இருந்த தமிழரான எஸ்.ஆர்.நாதனின் மறைவுச் செய்தி பெரும் துயரம் அளிக்கிறது.
நவீன சிங்கப்பூரின் தந்தையான லீ குவான் யூவின் கனவுத் திட்டங்களை செயல் படுத்தியவர். அவரது மறைவு சிங்கப்பூருக்கு மட்டுமல்ல, தமி ழர்கள் அனைவருக்கும் பேரிழப் பாகும்.
ராமதாஸ் (பாமக நிறுவனர்):
புலம் பெயர்ந்த தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்த எஸ்.ஆர்.நாதன் இளம் வயதில் வறுமை காரணமாக வேலை பார்த்துக் கொண்டே படித்தவர். மொழி பெயர்ப்பாளராக வாழ்க்கையைத் தொடங்கி அமெரிக்காவுக்கான சிங்கப்பூர் தூதர் அளவுக்கு உயர்ந்தவர். 1999 முதல் 2011 வரை சிங்கப்பூர் அதிபராக இருந்தவர். அவரது மறைவு தமிழர்களுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
கவிஞர் வைரமுத்து:
சிங்கப்பூரில் தமிழர்களின் அடையாளமாகத் திகழ்ந்த எஸ்.ஆர்.நாதனின் மறைவுச் செய்தி கேட்டு உள்ளம் உடைந்து போனேன். சிங்கப்பூரை கட்டிய மைத்த ஆட்சிப் பணியாளர்கள் 10 பேரில் ஒருவர். எளிமையே அவரது வாழ்வு. மக்கள் தொடர்பே அவரது மாண்பு. சிகரத்தை அடைந்தபோதும் அடிவாரத்தை மறக்காதவர். ‘அதிபர் அறநிதி’ என்ற நிதியை ஏற்படுத்தி நூறு மில்லியன் டாலர் திரட்டி அதனை அடித்தட்டு மக்களின் கல்விக்கு கொடையாக கொடுத்த சமூகச் சிந்தனையாளர். சிங்கப்பூர் ஒரு தலைசிறந்த தலைவரை இழந்து விட்டது.
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் உள்ளிட்டோர் எஸ்.ஆர்.நாதன் மறைவுக்கு இரங்கல் தெரி வித்துள்ளனர்.