Published : 09 Feb 2017 08:33 AM
Last Updated : 09 Feb 2017 08:33 AM

ஓபிஎஸ் முடிவு: மக்கள் என்ன நினைக்கிறார்கள்?

மெரினா கடற்கரையில் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் நேற்று முதல்நாள் இரவு, திடீரென்று 40 நிமிடங்கள் தியானத்தை மேற்கொண்ட பிறகு பத்திரிகையாளர்களிடம் சில உண்மைகளை பகிர்ந்துகொண்டார் ஓபிஎஸ். இந்நிலையில் அதிமுகவில் பெரும் புயல் அடிக்க ஆரம்பித்து, தமிழக அரசியலில் அசாதாரண சூழல் நிலவ ஆரம்பித்துள்ளதைத் தொடர்ந்து, தமிழகம் முழுக்க மக்கள் மற்றும் அதிமுகவினர் சிலரிடம் கருத்து கேட்டறிந்தோம். என்ன சொல்கிறார்கள் இவர்கள்:

என்.பெரியசாமி (தனியார் ஊழியர் -வேளச்சேரி:

பன்னீர்செல்வம் எளிமை யாக பழகுவது வரவேற்கத் தக்கது. தற்போதைய சூழலில், ஆட்சி அமைக் கும் அளவுக்கு போதிய எம்.எல்.ஏ-க் களின் ஆதரவு கிடைக்குமா என்பது சந்தேகம்தான்.

சரஸ்வதி நந்தகுமார் (அதிமுக தொண்டர் - வில்லிவாக்கம்):

ஜெய லலிதாவையும் கட்சி நடவடிக்கைகளை யும் முழுமையாக புரிந்துகொண்டவர் சசிகலா. அவருக்குதான் கட்சிக்குள் போதிய ஆதரவு உள்ளது.

முகமது இஸ்மாயில் (விடுதி காப்பாளர் - சேப்பாக்கம்):

ஜெயலலிதாவால் கைகாட்டப்பட்ட பன்னீர்செல்வம்தான் முதல்வராக இருக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

எல்.சுந்தர்ஜி (எம்பிஏ பட்டதாரி-திருநெல்வேலி):

ஆட்சி அதிகாரத் துக்கும், கட்சி பொறுப்புக்கும் ஜெய லலிதாவால் சசிகலா அடை யாளம் காட்டப்படவில்லை. இளை ஞர்கள் மத்தியில் ஓ.பி.எஸ்ஸுக்குத்தான் ஆதரவு.

டி.கெங்கமுத்து (எம்ஜிஆர் தொண்டர் தூத்துக்குடி):

ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக தொடர வேண்டும் என்பதே அதிமுக தொண்டர்கள் மற்றும் தமிழக மக்களின் விருப்பம். சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

பாலகிருஷ்ணன் (ஒன்றிய அதிமுக செயலாளர் அகஸ்தீஸ்வரம்):

கட்சியில் ஓ.பி.எஸ். நடத்தப்பட்ட விதம் கட்சித் தொண்டர்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

பி.அமிர்தம் (ஆட்டோ ஓட்டுநர் - திருச்சி):

சசிகலாவை ஏற்க முடியாது. கட்சி குலைந்துவிடாமல் இருக்க ஓ.பன்னீர்செல்வமும்-தீபாவும் இணைந்து பணியாற்ற வேண்டும்.

என்.கந்தசாமி (சிறு வியாபாரி - கரூர் தாந்தோணிமலை):

முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் தொடரவேண்டும். தீபாவையும் அவருடன் இணைத் துக்கொண்டு செயல்பட வேண்டும்.

கே.சின்னப்பா (கட்டிட மேஸ்திரி - பள்ளியக்ரஹாரம்)

ஜெயலலிதா உயி ருடன் இருக்கும் வரை சசிகலாவுக்கு கட்சிப் பொறுப்பில் எந்த முக் கியத்துவமும் கொடுக்கவில்லை. பன்னீர்செல்வத்துக்கே அதிமுக தொண்டர்கள் ஆதரவு.

அழகு சின்னையன் (முன்னாள் ஒன்றிய அதிமுக செயலாளர் கும்பகோணம்):

பன்னீர்செல்வம். அவரது பக்கம் நியாயம் உள்ளது. சசிகலா பக்கம் இருப்பவர்கள் காலம் செல்லச் செல்ல பன்னீர்செல்வம் பக்கம் வர வாய்ப்புள்ளது.

பி.ஏ.ஜெயராஜ் (டயர் வியாபாரி- கோவை):

ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை சசிகலாவுக்கு எந்த பதவியோ, அங்கீகாரமோ தரவில்லை. ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதா வின் உண்மையான விசுவாசி. ஜெயலலிதா முதல்வர் பொறுப்புக்கு அடையாளம் காட்டியது பன்னீர் செல்வத்தைதான்.

விஜயன் (ஆசிரியர்-பெருமாநல்லூர், திருப்பூர்):.

சசிகலா முதல்வரானால், அவரது குடும்பத்தினர் பல்வேறு வழிகளிலும் கோலோச்சுவார்கள்.

சு.மனோகரன் (சமூக ஆர்வலர்- குன்னூர்)ஓ.பன்னீர்செல்வம்

முதல்வர் பணியை சரியாகத்தான் செய்துள்ளார். வழக்கு விசாரணையில் உள்ள நிலையிலும் ஆட்சிப் பொறுப்பேற்க சசிகலா செய்யும் அரசியல் ஏற்றுக்கொள்ள முடியாது.

அம்மன் வி.ரகுராமன் (எம்ஜிஆர் இளைஞரணி பொருளாளர்- குடியாத்தம்):

முதல்வர் பன்னீர்செல்வம் அவர்களின் செயல்பாடு திருப்தியாக இருக் கிறது. அவர் முதல்வராக தொடர வேண்டும். ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதிவிசாரணை நடத்தப்படும் என்ற அறிவிப்பை வரவேற்கிறேன்.

பொன்னரசி (அரசு ஊழியர்-வேலூர்):

முதல்வர் பன்னீர்செல்வம் அவர்களுக்கு பெண்கள் ஆதரவு முழுமையாக இருக்கிறது. சில நாட் களாக என்னைப் போன்றவர் களுக்கு இருந்த சந்தேகங்கங்களுக்கு அவரது பேட்டியில் விடை அளித் திருக்கிறார்.

ஆர்.ராமர் (திருமோகூர் பெருங்குடி, மதுரை):

சசிகலாவை நம்பி எப்படி ஓட்டுப்போட முடியும்? இன்னும் 4 ஆண்டுகள் உள்ளன. அதற்குள் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக ஆட்சி மற்றும் கட்சிப் பொறுப்புகளில் இருப்பவர்கள் சின்னம்மா,சின்னம்மா என கும்பிடுப்போட்டுத் திரிகின்றனர்.

க.மாரிமுத்து (சிவகங்கை):

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தற்போது எடுத்துள்ள நிலைப்பாட்டை வரவேற்கிறோம். இக்கட்டான காலங்களில் எல்லாம் பன்னீர்செல்வமே முதல்வராக இருந்துள்ளார். அவரை மாற்றவேண்டிய அவசியமில்லை.

பி.கோபாலகிருஷ்ணன், (பத்திர எழுத்தர் - வத்தலகுண்டு):

தமிழக முதல்வராக உள்ள ஓ.பன்னீர்செல்வம் அரசை நல்லமுறையில் பிரச் சினையில்லாமல் நடத்திவந்தார். மனதில் உள்ள குமுறல்களை பொறுக்க முடியாமல் வெளிப்படுத்திவிட்டார். அவர் தற்போது எடுத்துள்ள முடிவு சரியானதுதான்.

முத்துமணி, (டீக்கடை உரிமையாளர் - ராமநாதபுரம்):

தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சரியான முடிவை எடுத்துள்ளார். மக்களின் எண்ணங்களை பிரதிபலித்துள்ளார். அவரது முடிவை நான் ஆதரிக்கிறேன்.

ராணி (பழ வியாபாரி, காட்டு மன்னார்கோவில்):

ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டு, 2 முறை முதல்வராக இருந்தவர் பன்னீர்செல்வம். அவரே முதல்வ ராக தொடர்ந்தால் மக்களுக்கு பல நலத் திட்டங்களை செயல் படுத்துவார்.

சிதம்பரம் ஜெயவேல் (அதிமுக முன்னாள் தலைமை கழகப் பேச்சாளர்):

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கையைப் பெற்ற ஓபிஎஸ், கட்சிக்காக நிறைய உழைத் தவர். கட்சிக்கு சம்பந்தமே இல்லாத சசிகலா கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்ற நினைப்பது காலக் கொடுமை.

பூ.கிருஷ்ணன், (முன்னாள் எம்எல்ஏ விழுப்புரம்)

ஓ.பி.எஸ். படிப்படியாக ஏறியவர் என்பதால் அவர் நிலைத்து நிற்பார். திடீரென உச்சத்துக்கு செல்ல ஆசைப்படுபவர்கள் கீழே விழுந்துதான் ஆகவேண்டும்.

நிலவளம் கதிரவன். (நல்லாண் பிள்ளைபெற்றாள்):

மக்களின் மனம் கவர்ந்தவராக முன்னேறியுள்ளார் ஓபிஎஸ். ஆதிக்க வர்க்கத்துக்கு இது பிடிக்கவில்லை. ஓபிஎஸ் மட்டுமே மக்களின் மனம் கவர்ந்த முதல்வராக இருப்பார்.

சிவதுரை (ஆட்டோ ஓட்டுநர் புதுச்சேரி):

முதல்வர் பன்னீர்செல்வம் பேசியுள்ள கருத்துகள் ஏற்றுக்கொள்ள தக்கதாக உள்ளன. மக்கள் விரும்பாத நபரை எவ்வாறு முதல்வராக தேர்வு செய்ய முடியும்? கட்சியில் எந்தவித பொறுப்பிலும் இல்லாத சசிகலா திடீரென நான்தான் முதல்வர் என்று கூறுவதை எந்த வகையிலும் ஏற்க முடியாது.

டி.சி.துரைசாமி (விவசாயி - தொட்டிபாளையம், ஈரோடு):

ஜல்லிகட்டு, ஆந்திரா குடிநீர் என குறுகிய காலத்தில் பல சாதனைகளைச் செய்தவர் ஓபிஎஸ். ஜெயலலிதா மறைவிற்கு பின் அவர் அடையாளம் காட்டிய ஓபிஎஸ்தான் தொடர்ந்து முதல்வராக பதவி வகிக்க தகுதியானவர்.

விஜயா (புதுப்பாளையம், கோபி):

முதல் வர் ஓபிஎஸ் தன் மனதில் உள் ளதை வெளிப்படுத்தி இருக்கிறார். சசிகலாவுக்கு ஆதரவாக பேசுகிற வர்களை ஊருக்குள்விட மாட்டோம்.

ஜே.கே.வெங்கடாசலம், (ஜெ.பேரவை துணைச் செயலாளர்-கிருஷ்ணகிரி):

ஜெய லலிதாவின் மறைவுக்குப் பிறகு மன உளைச்சலில் இருந்தோம். முதல்வர் ஓபிஎஸ் மருந்தாக செயல்படுகிறார்.

சரவணன், (வியாபாரி- சேலம்):

எம்எல்ஏ பொறுப்பில் கூட இல்லாத சசிகலாவுக்கு அரசியல் அனுபவம் கிடையாது. ஜெயலலிதாவால் பதவியில் அமர்த்தப்பட்டவர் என் பதால், முதலமைச்சராக ஓபிஎஸ் நீடிக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x