

கன்னியாகுமரி அருகே மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் கடலோரத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கடந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை மற்றும் வடகிழக்கு பருவமழை ஆகியவை பொய்த்துவிட்ட நிலை யில், தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகள் வறண்டு வருகின்றன. தமிழகம் முழுவதும், அடுத்த 6 மாதங் களுக்கு குடிநீர் தேவையை சமாளிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை ஆகியவை பல்வேறு ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகிறது. இதற்கிடையில் அடுத்துவரும் நாட்களில் கடலோர தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பி ருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறும்போது, கன்னியாகுமரி அருகே மேலடுக்கு சுழற்சி ஒன்று நிலவி வருகிறது. இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக கடலோரப் பகுதி மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காரணப்படும். லேசான மழை ஒருசில இடங்களில் பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 31 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 23 டிகிரி செல்சியஸ் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.