

குறைந்தபட்ச ஊதிய உயர்வு, புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் தேசிய போராட்ட குழுவினர் நேற்று நடத்திய பேச்சில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், வேலைநிறுத்த போராட்டம் அடுத்த 4 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச ஊதிய உயர்வு, புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து, காலிப்பணியிடங்கள் நிரப்ப வேண்டும் என்பது உட்பட 36 அம்சகோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 11-ம் தேதி காலை முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்துவதாக மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தன.
இதற்கிடையே, டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் நேற்று தேசிய போராட்ட குழுவின் மூத்த நிர்வாகிகள் கோரிக் கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மத்திய அரசு ஊழியர்களின் கோரிக் கைகள் குறித்து ஒரு குழு அமைப்பதாக அமைச்சர் உறுதி அளித்துள்ளார். இதனால், மத்திய அரசு ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் 4 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.