

கேரளத்தில் நடிகை பாவானாவை காரில் கடத்தி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக 6 பேரை கேரள போலீஸார் கைது செய்துள்ளனர். அதில் முக்கிய நபராகக் கருதப்படும் சுனில்குமார் (எ) பல்சர் சுனி, விஜிஸ் ஆகியோரை காவலில் எடுத்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கேரளத்தில் இருந்து பிப்.19-ம் தேதி தப்பி கோவைக்கு வந்த சுனில் குமார், விஜிஸுக்கு கோவை ஹோப்காலேஜ் பகுதியில் வசிக் கும் சார்லி தாமஸ் என்பவர் 2 நாட் கள் அடைக்கலம் கொடுத்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. அதன்பேரில் சுனில்குமார், விஜிஸ் ஆகியோரை கேரள போலீஸார், நேற்றுமுன் தினம் கோவை அழைத்து வந்து சார்லியின் வீட்டில் சோதனை நடத்தினர். சிறிய வகைக் கணினி, உடை உட்பட சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. ஆனால், சார்லி தாமஸ் தலைமறைவாகிவிட்டார்.
சார்லியுடன் தங்கியிருந்த லேத் தொழிலாளி அந்தோணி செல்வத்திடமும், அருகில் வசிப் பவர்களிடமும் போலீஸார் விசாரித்தனர். பாவனா தொடர் பான முக்கிய ஆவணங்கள் இருக்கலாம் என்பதால் போலீஸார் அவரை தேடி வந்தனர்.
இந்நிலையில், பாவனா கடத்தல் சம்பவம் தொடர்பாக, கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள பனங்காடு என்ற இடத்தில் நேற்று முன்தினம் இரவு சுமார் 11 மணியளவில், மலையாள தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு சார்லி தாமஸ் பேட்டி அளித்ததாகக் கூறப்படுகிறது. அதையறிந்து அங்குச் சென்ற போலீஸார், அவரைக் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் அவரிடம் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
இதேபோல, சுனில்குமார், விஜிஸும் கோவையில் இருந்து பிப்.21-ம் தேதி புறப்பட்டு எர்ணா குளம் பகுதியில் தங்கியுள்ளனர். எனவே, வழக்கு தொடர்பான ஆவ ணங்கள் கிடைக்கும் என்ற எதிர் பார்ப்பில் இருவரையும் கேரள போலீஸார் நேற்று அங்கு அழைத்துச் சென்றனர். எர்ணா குளத்தை அடுத்துள்ள வாதமன் என்ற பகுதியில் இருவரும் தங்கி யிருந்த விடுதி உள்ளிட்ட இடங்களில் சோதனை நடந்தது.
சுனில்குமாரும், விஜிஸும் கோவை வந்தபோது, அவர்களுடன் வந்த மற்றொரு நபர் யார் என்பதையும் போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.